– பிரமோத்.
தன் கண் முன்னே நடந்த விபத்தில் சமயோசிதமாக செயல்பட்டு.. இளைஞனின் உயிரைக் காப்பாற்றியவர் நர்ஸ் வனஜார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும்.அவர், அன்று வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.. வடுவூர் அருகே சென்ற போது அவர் சென்ற காரை ஓவர்டேக் செய்தபடியே கடக்கிறது இரு சக்கர வாகனம்..ஒட்டிய இளைஞரின் காதில் ஹெட்போன்… நடக்கப் போகும் விபரீதத்தை உணராமல் வேகமாக சென்றவருக்கு எதிரே… கூட்டம் கூட்டமாக ஆடுகள்…என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் மோதி..தலை குப்புற கவிழ.. மூச்சு பேச்சற்று கீழே விழுந்தவனை சுற்றி நிற்கிறது கூட்டம்..

“அப்போது எனக்கு தோன்றியது எல்லாம் அந்த பையனை காப்பாற்ற வேண்டும் என்பது தான்… கூட்டத்தை விலக்கி பார்த்த போது…வீபரீதம் புரிந்தது எனக்கு.. அடுத்த நொடி.. மனமும்.. புத்தியும் தானாகவே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது… நர்ஸிங் படிப்பில் நான் கற்றுக் கொண்ட வித்தையை மூளைக்கு செய்தி அனுப்ப…அந்த பையனின் மார்பில் விடாமல் தட்டினேன்”
– வனஜா விவரிக்கும் போதே நிலைமையின் தீவிரம் புரிந்தது நமக்கு..
‘சற்று நேரத்தில் மூச்சு பேச்சற்று கிடந்த அந்த இளைஞனுக்கு மீண்டும் சுவாசம் திரும்புவதற்கும்.. ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.. அந்த பையனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய பிறகு தான் எனக்கு போன உசுரு திருப்பி வந்தது “

– சொல்லும் போது வனஜாவின் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. ” ஒரு உசிரை காப்பாத்திட்ட தாயே…நீ தான் கடவுள்” என்று அங்கு இருந்தவர்கள் சொல்லும் போது வார்த்தைகளே வரவில்லை. நான் படித்த படிப்பின் மீது மரியாதை எனக்கு புரிந்த நாள் “… நெகிழ்ச்சியோடு கூறுகிறார் அந்த வெண்ணிற ஆடை தேவதை…
சுகாதார அமைச்சர் மா.
சுப்பிரமணியன்… செயலாளர் ராதாகிருஷ்ணன்.. மாவட்ட ஆட்சியர்…எஸ்.பி என்று அதிகாரிகள் அடுத்தடுத்து கூப்பிட்டு பாராட்டியுள்ளனர்…
°நான் எதுவும் செய்யவில்லை.. கடமையை தான் செய்தேன்… அந்த உசிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன்…அது நடந்ததில் மனசு நிறைந்து விட்டது.”. வனஜாவின் கண்களில் மின்னல்.. மனித உருவில் கடவுள் காட்சி அளிப்பார் என்பார்கள்.. வனிதாவும்.. அப்படித்தான்.
ஹெட் போன் மோகத்தில் தன்னிலை மறக்கும்… இளைஞர்களே..எல்லா இடங்களிலும் உங்களோடு வனஜாக்கள் வர மாட்டார்கள்..என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…
