வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர்: மேட்டூர் அணையிலிருந்து திறப்பு!

வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர்: மேட்டூர் அணையிலிருந்து திறப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119 அடியை எட்டிய நிலையில், அந்த அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்ததாவது:

காவிரி நீரின் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே உபரிநீர் அணையிலிருந்து வெளீயேற்ற தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தற்போது 20,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து படிப்படியாக, வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com