
இன்று ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செயல்படுவது நல்லது. பணவரவு ஏற்படும். ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
ஹஸ்தம்: நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9