10 Foods That Can Help Soothe and Manage Ulcers
10 Foods That Can Help Soothe and Manage Ulcers

அல்சரை குணப்படுத்தும் 6 அற்புத உணவுகள்! 

அல்சர் எனப்படும் வயிறு மற்றும் சிறுகுடல் புறணியில் ஏற்படும் புண்கள், மிகுந்த வலி, அசௌகரியம் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அல்சரை குணப்படுத்த மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன என்றாலும் சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவே அதன் அறிகுறிகளைத் தணித்து குணப்படுத்த முடியும். இப்பதிவில் அத்தகைய உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 

  1. ப்ரோபயோடிக் உணவுகள்: ப்ரோ பயோடிக் உணவுகளில் ஆரோக்கியமான குடல் சூழலை உண்டாக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அடங்கியிருக்கும். குறிப்பாக நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட உணவுகளில் இவை அதிகமாக இருக்கும் என்பதால் அத்தகைய உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக தயிரை சொல்லலாம். எனவே அல்சர் இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

  2. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்ப்பது மூலமாக அல்சரின் தாக்கத்தை குறைக்க முடியும். முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளில் நார்சத்துக்கள் அதிகம் இருக்கும். நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி புண்களின் பாதிப்பைப் போக்குகிறது. 

  3. தேன்: தேனில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாகவே நூற்றாண்டு காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், அல்சர் புண்களை விரைவில் குணப்படுத்தும். மேலும் தேன் திசு வளர்ச்சியைத் தூண்டி புண்களால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. 

  4. காய்கறிகள்: ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலே போன்ற காய்கறிகளில் ஆக்சிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளன. இந்த காய்கறிகள் வயிற்றில் உள்ள புண்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் ஏற்கனவே இருக்கும் அல்சர் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு. இவற்றின் அதிகப்படியான நார்ச்சத்து குடல் இயக்கத்தை பராமரிக்க உதவி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

  5. கற்றாழை: கற்றாழை அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காக அறியப்பட்ட ஒன்றாகும். கற்றாழை சாறு குடிப்பது வயிற்றுப் புரணியில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்றவும், அதன் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். கற்றாழையை உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன் சுகாதார நிபுணறுடன் கலந்தாலசித்து முடிவெடுப்பது நல்லது. 

  6. இஞ்சி: பல நூற்றாண்டுகளாக அல்சர் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகளைப் போக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் புண்களுடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இஞ்சியை தேநீராகவோ அல்லது உணவு மூலமாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை மிதமாகப் பயன்படுத்துவது முக்கியம். 

மேலும் பப்பாளி, மஞ்சள், பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வது மூலமாக, அல்சரின் தாக்கம் விரைவாக குணமடையும். எனவே முற்றிலும் ஆரோக்கியமான முறையில் அல்சரை வீட்டிலிருந்தே நீங்கள் குணப்படுத்த முடியும். இருப்பினும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com