பல் வலியிலிருந்து நிவாரணம் பெற பத்து வீட்டு வைத்தியக் குறிப்புகள்!

10 Home Remedies for Toothache Relief
10 Home Remedies for Toothache Reliefhttps://tamil.fastnews

ற்களில் சொத்தை உண்டாகி வலியேற்படுவது, ஈறு வீக்கம், ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற சிறு சிறு உபாதைகள் அவ்வப்போது வருவது சகஜம். இவற்றிற்கெல்லாம் முக்கியக் காரணமாக பற்களை சரிவர பராமரிக்காததே எனக் கூறலாம். இவ்வாறான அசௌகரியங்கள் வரும்போது வீட்டிலேயே இயற்கையான முறையில் சிகிச்சை செய்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். அவ்வாறான வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* இளஞ்சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து கரைத்து, அந்த நீரை வாயில் ஊற்றி முப்பது நொடிகள் கொப்பளித்து உமிழ, ஈறு வீக்கம் குறைந்து வாய் சுத்தமடையும்.

* லவங்க எண்ணெய் பல் வலி குறைக்கும் குணம் கொண்டது. இந்த எண்ணெயை பஞ்சில் நனைத்து வலியுள்ள இடத்தில் வைக்க தற்காலிகமாக வலி நீங்கும்.

* ஐஸ் கட்டியால் 15 நிமிடம் கன்னத்தில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்; பிரச்னை இருந்த இடம் உணர்வு இல்லாது போகும்.

* புதினா டீயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் உள்ளது. புதினா டீயை ஆற வைத்து, வாயில் ஊற்றி கொப்பளிக்க சுகம் கிடைக்கும்.

* ஒரு பூண்டுப் பல்லை உப்பு சேர்த்து நசுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்திருக்க குணம் உண்டாகும்.

* தண்ணீரையும் ஹைட்ரஜன் பெராக்ஸைடையும் (peroxide) 1:1 என்ற விகிதத்தில் கலந்து வாயில் ஊற்றி முப்பது செகண்ட் கொப்பளித்து உமிழ, வீக்கம் குறையும்; பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

* கொய்யா இலைகளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும், வலியை குறையச் செய்யும் குணமும் உள்ளன. புதிய இளசான கொய்யா இலைகளை மெல்வது அல்லது அதை அரைத்து அந்த பேஸ்ட்டை வலியுள்ள இடத்தில் தடவ, நிவாரணம் கிடைக்கும்.

* ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது மஞ்சள். மஞ்சளை தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த பேஸ்ட்டை வலியுள்ள இடத்தில் தடவ வீக்கமும் வலியும் குறையும்.

* ஆலுவேரா ஜெல்லை பாதிப்பேற்பட்ட இடத்தில் தடவ வீக்கமும் வலியும் குறையும்.

இதையும் படியுங்கள்:
‘கல்வியே வாழ்வின் வெற்றி திறவுகோல்’ சுதா மூர்த்தி சொல்லும் வாழ்க்கைப் பாடம்!
10 Home Remedies for Toothache Relief

* லவங்கத்திலுள்ள யூகெனால் (eugenol) என்ற பொருள் இயற்கையாகவே உணர்விழக்கச் செய்யும் குணம் கொண்டது. லவங்கத்தை வாயில் போட்டு பாதிப்பு இருக்குமிடத்தில் அடக்கிக் கொண்டால் அங்கிருக்கும் நரம்புகள் மரத்துப் போய் வலி குறையும்.

மேற்கூறிய வழிமுறைகளெல்லாம் தற்காலிக நிவாரணம் அளிப்பவையே. தீர்வேதும் கிடைக்காமல், பிரச்னை பெரிதானால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம் தரும்.

பொதுவாக, வாய்க்குள் கோளாறுகள் உண்டாக சுகாதாரமின்மையே காரணமாகும். பற்களுக்கிடையில் உணவுத் துகள்கள் தங்காமலும், துர்நாற்றம் வராமலும் வாயை பாதுகாப்பது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com