சீனியர் சிட்டிசன்களின் மகிழ்ச்சிக்கு 10 டிப்ஸ்!

சீனியர் சிட்டிசன்களின் மகிழ்ச்சிக்கு 10 டிப்ஸ்!

1. காலையில் கண் விழிக்கையில் அலார சத்தம் அல்லது பறவைகளின் கீச்சொலி கேட்டால், இவ்வுலகம் இன்னும் நமதென்றெண்ணி  மகிழுங்க.

2. எழுந்து, சிறிது நீர் அருந்திவிட்டு ஒரு குட்மார்னிங் மெசேஜ் அனுப்புங்க. நாள் அழகாகத் தொடங்கும்.

3. நண்பர்களிடமிருந்து அந்நாளை அவர்களுடன் கழிக்கச்சொல்லி அழைப்பு வந்தால், இன்னும் அவர்கள் மனதில் நீங்கள் இருப்பதை எண்ணி மகிழுங்கள்.

4. மற்றவர் உங்களைப்பற்றி அவதூறு பேசினால் அவர்களை விடவும் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நினைத்து மகிழுங்க.

5. உடல் எடை அதிகரிப்பது பற்றி வருந்த வேண்டாம்.

நோயெதிர்ப்பு சக்தியுடன்,  உள்ளுறுப்புகள் சீராக செயல்படுகிறது என்று நிம்மதி அடையுங்கள். நல்லுணவு, நடைப்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை கடமையாக எண்ணி மேற்கொள்ளுங்கள்.

6. அடிக்கடி நண்பர்களுடன் பேசி, சாப்பிட்டு, பயணித்து நாட்களைக் கழிப்பது உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் காட்டும். மகிழ்விக்கும்.

7. நண்பர்களுடன் உரையாடும்போதோ, விளையாடும்போதோ உங்கள் ஆற்றலை வெளியிட வெட்கப்பட வேண்டாம். அது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியதின் வெளிப்பாடு.

8. 65 வயதுக்கு மேல் மனநிறைவு கொள்ளுங்கள்.

9. உங்களால் வெளியில் சென்று காய்கறி வாங்கிக்கொண்டு வீடு திரும்ப முடியுமென்றால் நீங்கள் ஒரு வெற்றியாளர்.

10. இந்தக் கட்டுரையைப் படித்து, புன்னகைக்க முடிந்தால் உங்கள் வாழ்க்கையில் சந்தோசத்திற்கு குறைவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com