முகக் கொழுப்பை குறைப்பதற்கான 10 வழிமுறைகள்!

Ways to reduce face fat
Ways to reduce face fat
Published on

டலில் எடை கூடும்பொழுது உடல் முழுவதும், குறிப்பாக முதுகு, கைகள் தொடைகள் மற்றும் முகத்தைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்குகிறது. அதிகரித்த எடையை குறைப்பது சற்று கடினமாகவே உள்ளது. இதில் முகத்தில் கொழுப்பு சேர்வதனால் சதை அதிகமாகி கழுத்துப் பகுதி பெரிதாக தோன்றுவதால் தாடை பகுதி அழகாகத் தெரியாது. ஆதலால் முகத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. நீரிழப்பு காரணமாக முகத்தில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குவதால் தினந்தோறும் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. உடலுக்குத் தீங்கு விளைவிக்காத காய்கறி, பழங்களை சாப்பிட்டு துரித உணவுகளைத் தவிர்த்து டயட் இருப்பதோடு சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்து சாப்பிடுவதால் முகத்தில் கொழுப்பு குறைந்து கைமேல் பலன் கிடைக்கும்.

3. தூக்கமின்மையும் முகத்தில் சதை போடுவதற்கு ஒரு காரணமாக இருப்பதால் தினமும் ஆறிலிருந்து எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்பது மருத்துவர்களின் கூற்றாக உள்ளது.

4. வாயின் கீழ் பகுதியை முன்னும் பின்னுமாக அசை போட்டால் முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்கலாம். இந்தப் பயிற்சியை 8 முதல் 10 முறை செய்ய முகத்தில் உள்ள சதை குறைய ஆரம்பிக்கும்.

5. நாக்கால் அவ்வப்போது மூக்கைத் தொடலாம். இந்தப் பயிற்சியை 5 முறை செய்ய முகத்தில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

6. கழுத்தை இடது புறமாகத் திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னுமாக அசைக்கவும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள தசைகள் குறைய ஆரம்பிக்கும் என்கின்றனர் பயன் பெற்றவர்கள்.

7. குக்கீகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் முகத்தில் கொழுப்பை ஏற்படுத்தும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
Over thinking உடம்புக்கு மட்டுமல்ல; மனதுக்கும் ஆகாது!
Ways to reduce face fat

8. காரம் அதிகம் உள்ள உணவை உட்கொண்டால், உடலில் உப்பின் அளவு கூடி, நீர் தேங்கி முகம் வீங்கியிருக்கும் என்பதால் கார உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

9. மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிப்பும் முகக் கொழுப்பிற்கு காரணமாக இருப்பதால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

10. உடல் எடை அதிகரிப்பும் முகக் கொழுப்பிற்கு காரணமாக இருப்பதால் உடல் எடையை குறைக்கும் வழிகளைக் கையாள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com