மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

Energy Drinks
Energy Drinks
Published on

வெயில் காலத்தில் தண்ணீர் குடிக்க வேண்டிய எண்ணம் நமக்கு தானாகவே வந்துவிடும். ஆனால், மழைக்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். இதனால் உடலில் Dehydration ஏற்படும். இந்த பதிவில் உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும், உடலுக்கு தேவையான சக்திக் கொடுக்கக்கூடிய 4 பானங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. மாதுளை ஜூஸ்: மாதுளை ஜூஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் குணங்கள் உள்ளன. அது உடலுக்கு நிறைய நன்மைகள் தரும். எனவே, உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள காலை உணவில் மாதுளை ஜூஸை சேர்த்துக்கொள்ளலாம்.

2. லெமன் ஜூஸ்: உடலில் உள்ள நீரிழப்பை சரிசெய்ய மற்றும் உடலுக்குத் தேவையான சக்தியை பெறுவதற்கு லெமன் ஜூஸை அருந்தலாம். லெமனை வைத்து தயாரிக்கப்படும் Shikanji, Lemonade போன்ற பானங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல், உடலுக்கு உடனடி சக்தி தருகிறது. மேலும், செரிமானத்திற்கு உதவுகிறது.

3. தர்பூசணி ஜூஸ்: வெயில் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் தர்பூசணி நம் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. பொட்டாசியம் அதிகமாக உள்ள தர்பூசணி ஜூஸை காலையில் அருந்துவதால், செரிமானம் மற்றும் உடல் ஈரப்பதத்திற்கு உதவுகிறது.

4. வாழைப்பழ மில்க் ஷேக்: வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஆகியவை உள்ளதால் உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. வாழைப்பழத்தில் மில்க் ஷேக் செய்து அருந்துவது உடலை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல், உடலில் உள்ள சோர்வு, களைப்பைப் போக்க உதவுகிறது. இதனுடன் Dry fruits சேர்த்து அருந்துவது மேலும் சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்!
Energy Drinks

மழைக்காலங்களில் தண்ணீர் குடிப்பதை அறவே மறந்து விடுவோம். எனவே, கைகளில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்வது நல்லது. தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நினைவில் வைத்துக்கொள்ள அலாரம் செட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஸ்ட்ரா பெர்ரி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மழைக்காலங்களில் Herbal tea, soup ஆகியவற்றை அருந்தலாம். மழைக்காலத்தில் உடலை  ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கலாம். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com