
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. ஆனால் இந்த உப்பை அதிகமாக நாம் உணவில் பயன்படுத்தினால் பல உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும். உப்பு சேர்க்காத உணவுகளும் இருக்கின்றன. உணவிற்கு ருசியை கொடுப்பது, ஊட்டச்சத்துகளை சேர்ப்பது என உப்பு பெரும் பங்கு வகிக்கிறது என்பது உண்மைதான். அதிலும் ஒரு சில உணவுகளோடு உப்பை கலக்கும் போது அது விஷமாக மாறக்கூடும் என்றும் மூத்த மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் உப்பு சேர்த்து சாப்பிட கூடாத 4 உணவுகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. சாலட்
சாலட் உடன் உப்பைச் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்க தொடங்குகிறது. இதனால் சிறுநீரக நோய்கள் உட்பட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சாலட்டுடன் உப்பை தவிர்க்க வேண்டும்.
2. ஜூஸ்
சில பேர் ஜூஸின் சுவையை அதிகரிக்க அதனுடன் உப்பு சேர்த்து குடிக்கிறார்கள் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு ஊட்டச்சத்துக்களையும் குறைக்கிறது. ஆதலால் பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் உப்பு பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
3. பழங்கள்
பழங்கள் மீது உப்பை தூவி சுவைக்காக சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும். ஏனெனில் அதிக உப்பு உட்கொள்வது நீர் தேக்கத்தை ஏற்படுத்தி, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை அதிகரித்து பழங்களின் ஊட்டச்சத்துக்களை குறைக்கும் என்பதால் பழங்களோடு உப்பை தவிர்த்து விடுவதே சாலச் சிறந்தது.
4. தயிர்
பொதுவாக பால் மற்றும் பால் பொருட்களில் உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் தயிரில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் முடி உதிர்தல் பிரச்சனையை ஏற்படுத்தி சிறு வயதிலேயே முடி நரைத்து விடும். மேலும் முகத்தில் கொப்புளங்கள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் தயிரில் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் என்பதால் தயிரோடு உப்பு சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும். தயிர் பச்சடியிலும் உப்பு சேர்ப்பது தவறான முறையாகும்.
உப்பு உடலுக்கு முக்கியம் என்றாலும் மேற்கூறிய நான்கு உணவுகளிலும் உப்பை சேர்க்காமல் ஆரோக்கியத்தை பேணுங்கள்.