அனீமியாவை போக்கும் 5 அற்புத உணவுகள்!

anemia
anemia
Published on

டலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுவதே அனீமியா ஆகும். இரத்த சோகை காரணமாக, எப்போதும் சோர்வான உணர்வு, தலைவலி, பசியின்மை, எரிச்சல், முடி உதிர்தல், பலவீனமான நகங்கள், மூச்சுத் திணறல், வாய் புண், நிற்கும்போது மயக்கம், பாலுணர்வு இல்லாமை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இவை வழக்கான, ஆரோக்கியமான உடல் செயல்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய அனிமியாவை போக்கும் 5 அற்புத உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பீட்ரூட்: பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதோடு போலேட், வைட்டமின் சி ஆகியவையும் அபரிமிதமாக இருப்பதால் தொடர்ந்து பீட்ரூட்டை சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை எளிதாக அதிகரித்து அனீமியாவை போக்க உதவும். இதை சாலட், கறி, ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம்.

2. சிவப்பு ராஜ்மா: சிவப்பு ராஜ்மாவில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் சைவ உணவு உண்பவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க இது சிறந்த வழியாக இருக்கும். ஏனெனில் இதில் தாவர அடிப்படையிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் இருப்பதால். சப்பாத்தி அல்லது சாதத்துடன் ராஜ்மா உட்கொள்வது இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை அதிகரித்து அனீமியாவை போக்குகிறது.

3. வெல்லம்: வெல்லம் இயற்கையான இனிப்பு சுவை கொண்டதோடு இரும்புச்சத்தும் அதிகம் உள்ளதால் இதனை உண்பவர்களுக்கு இரத்த சோகையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வெல்லத்தை தேநீரில் சேர்த்தோ அல்லது காலை உணவுடனோ உட்கொள்ள இரும்புச்சத்தை அதிகரித்து ஆற்றலையும் அளிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
anemia

4. மாதுளை: மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பழத்தில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளதால் சாறு வடிவிலும் உட்கொள்ள இரத்த சோகை நீங்குகிறது.

5. சிவப்பு கேப்சிகம்: சிவப்பு  கேப்சிகத்தில் இரும்புச் சத்தின் அளவு மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இல்லாவிட்டாலும், இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இது தாவரங்களிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. இதனை பச்சையாகவோ, வதக்கியோ, வேக வைத்தோ அல்லது பல்வேறு உணவு வகைகளாகவோ சமைத்து சாப்பிட அனீமியாவுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com