நகங்களின் நலம் காக்கும் ஐந்து உணவுகள்!

5 Foods That Keep Nails Healthy
5 Foods That Keep Nails Healthyhttps://tamil.boldsky.com

பெண்களின் வெளித்தோற்ற அழகுக்கு அழகு சேர்ப்பவை, அவர்களின் முடி, முகம், கண்கள், உதடு, நகம் போன்ற உடல் பாகங்களின் மீது தனி கவனம் செலுத்தி அவற்றின் அழகை மேம்படுத்திக் காட்டுவதே என்று தாராளமாகக் கூறலாம். உதாரணத்திற்கு, நகங்களை எடுத்துக்கொண்டால், முதலில் சிவப்பு நிறத்தில் ஆரம்பித்து, பின் பல வண்ணங்களில் நகப்பூச்சு (Nail Polish) செய்து வந்தனர்.

தற்போது நெயில் ஆர்ட் எனக் கூறி நகத்தின் மீது பல ஓவியங்களை வரைந்து கொள்வது நாகரிகமாகிவிட்டது. அழகை வெளிக்கொணர்வதில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் நகங்கள் ஆரோக்கியம் பெற்று சதைகளுடன் ஒன்றி வளர நாம் உண்ண வேண்டிய ஐந்து வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

* அதிகளவு இரும்புச் சத்து, வைட்டமின் A மற்றும் C அடங்கிய பசலைக் கீரை ஒட்டுமொத்த நகங்களின் ஆரோக்கியத்தையும் மேன்மையடையச் செய்கிறது.  மேலும், நகங்களின் உடையக்கூடிய தன்மையை கட்டுப்படுத்தி வலுவுடன் வளரச் செய்கின்றன.

* பாதாம் பருப்புகளில், நகங்களின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான பயோட்டின் என்றொரு B வைட்டமின் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே, பாதாம் சாப்பிடுவது நகங்கள் வலுவுடன் வளர உதவும்.

* சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் புரோட்டீனும் அதிகம் உள்ளன. இவை நகங்களின் உடையக்கூடிய தன்மையை கட்டுப்படுத்தி, அவை வலுவுடனும், ஆரோக்கியமாகவும் வளர உதவி புரிகின்றன.

* முட்டைகளிலுள்ள புரோட்டீன் மற்றும் பயோட்டின் சத்துக்கள் நகங்கள் உடைவதைத் தடுத்து, நகங்கள் ஆரோக்கியம் பெற்று வளர்ச்சியடைய முக்கியப் பங்களிப்பைத் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
இல்லறம் நல்லறமாக நாம் செய்ய வேண்டியது என்ன?
5 Foods That Keep Nails Healthy

* வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பெர்ரி வகைப் பழங்களில் அதிகம் நிறைந்துள்ளன. 'நகமும் சதையும் போல' என்ற கூற்றிற்கிணங்க, நகமும் சதையும் வலுவுடன் இணைந்து வளர கொலாஜன் என்றொரு வகை புரோட்டீன் தேவை. கொலாஜன் உற்பத்திக்கு அதிகளவு உதவி புரிபவை பெர்ரி வகைப் பழங்கள். இவற்றை உண்பதும் நகங்கள் ஆரோக்கியத்துடன் வளர பெரும் உறுதுணையாகும்.

மேற்கூறிய ஐந்து வகை உணவுகளையும் தவறாமல் உட்கொண்டு அழகிய ஆரோக்கியமான நகங்களை பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com