30 வயதிற்கு மேல் ஆண்களுக்கு இந்த 5 சப்ளிமெண்ட்ஸ் அவசியம்! 

Supplements
Supplements
Published on

30 வயது என்பது ஆண்களுக்கு இளமைப் பருவத்தின் உற்சாகம் குறைந்து பொறுப்புகள் அதிகரிக்கிற நேரம். இந்த கட்டத்தில் ஆண்களின் உடல்நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.‌ இளமைப்பருவத்தில் நாம் பெற்ற ஊட்டச்சத்துக்கள் இனி போதுமானதாக இருக்காது. இதனால், உடல் செயல்பாடுகள் மெதுவாகி சில குறைபாடுகள் ஏற்படலாம். இந்த குறைபாடுகளை சரி செய்ய சப்ளிமெண்ட்ஸ் ஒரு நல்ல வழி. ஆனால், எந்த சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும் என்பது பலருக்கு குழப்பமாக இருக்கும். இந்தப் பதிவில் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தேவைப்படும் 5 சப்ளிமெண்ட்ஸ் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

1. வைட்டமின் D

வைட்டமின் D எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மனச்சோர்வைத் தடுக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சூரிய ஒளியில் இருந்து நாம் வைட்டமின் D-ஐ பெறலாம். ஆனால், நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் சூரிய ஒளியில் போதுமான நேரம் செலவிடுவதில்லை. இதனால், வைட்டமின் D குறைபாடு ஏற்படலாம்.

2. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து, கொழுப்பு அளவை கட்டுப்படுத்தி  இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்கிறது. மேலும், இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதால் தூக்கத்தின் தரம் அதிகரிக்கிறது. மீன், வால்நட்ஸ், சியா விதைகள் போன்ற உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Supplements

3. வைட்டமின் B12

வைட்டமின் B12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது. இது மனச்சோர்வைத் தடுக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இறைச்சி, மீன், பால் பொருட்கள் போன்ற உணவுகளில் வைட்டமின் B12 அதிகம் உள்ளன.

4. துத்தநாகம்

துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, காயங்களை ஆற்றுவதற்கு உதவுகிறது மற்றும் சுவை உணர்வை மேம்படுத்துகிறது. இது ஆண்மை குறைபாட்டை சரிசெய்து ஆண்மைத் திறனை அதிகரிக்கிறது. சிப்பிகள், பூசணி விதைகள், கோதுமை போன்ற உணவுகளில் துத்தநாகம் அதிகம் உள்ளன.

5. மக்னீசியம்

மக்னீசியம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை மேம்படுத்துவதால் மன அழுத்தம் குறைக்கிறது. பாதாம், ஆப்பிள், பானா, பீன்ஸ் போன்ற உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளன.

30 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மேற்கூறப்பட்ட 5 சப்ளிமெண்ட்ஸ் மிகவும் முக்கியமானவை. ஆனால், எந்த சப்ளிமெண்ட் எடுப்பதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம். ஏனென்றால், சில சப்ளிமெண்ட்ஸ் மற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஒவ்வொருவருடைய உடல் தேவையும் வேறுபடும். எனவே, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சப்ளிமெண்ட்களை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com