உடலுக்கு சிங்க் சத்தின் தேவையும் அதைத் தரும் 5 வகை உணவுகளும்!

கொண்டை கடலை, கிட்னி பீன்ஸ்
கொண்டை கடலை, கிட்னி பீன்ஸ்
Published on

சிங்க் என்ற கனிமச் சத்து நம் உடலின் செரிமானம், மெட்டபாலிசம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் காப்பது போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு உதவக் கூடிய ஒரு சத்தாகும். இது முன்னூறுக்கும் மேற்பட்ட என்சைம்கள் நல்ல முறையில் இயங்குவதற்கு துணை நிற்கும் ஓர் அத்தியாவசியமான மினரல் ஆகும்.

உடலின் செல்கள் பிரிந்து பலவாகப் பெருகவும், காயங்கள் விரைவில் குணமாகவும், நோயெதிர்ப்புச்  சக்தியை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது சிங்க். இந்தச் சத்தை நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்தும் சப்ளிமென்ட் மூலமும் பெற முடியும். சிங்க் அதிகம் நிறைந்துள்ள 5 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஷெல் ஃபிஷ்: ஓய்ஸ்டர் (Oyster), நண்டு, இறால் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சதைப் பகுதியிலிருந்து நம் உடலின் ஒரு நாள் சிங்க் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

2. லெக்யூம்ஸ்: கொண்டைக் கடலை, கிட்னி பீன்ஸ் போன்ற பயறு வகைகளில் சிங்க் சத்து அதிகம் உள்ளது.

3. விதைகள்: எள், ஸ்குவாஷ், பூசணி மற்றும் ஹெம்ப் விதைகளில் சிங்க் சத்து அதிகம் உண்டு.

இதையும் படியுங்கள்:
மிகவும் விசித்திரமான 8 வித ஃபோபியாக்கள் பற்றி தெரியுமா?
கொண்டை கடலை, கிட்னி பீன்ஸ்

4. நட்ஸ்: வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் பிற ஊட்டச் சத்துக்களுடன் சிங்க் சத்தும் அடங்கி உள்ளது.

5. டோஃபு: வெஜிடேரியன்ஸ் மற்றும் வேகன்கள் சிங்க் சத்தைப் பெற பெரிதும் உதவுவது டோஃபு.

மேற்கண்ட உணவுகளை அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் நம் உடலுக்குத் தேவைப்படும் சிங்க் என்ற முக்கியமான ஊட்டச் சத்தை இயற்கை முறையிலேயே பெற்று ஆரோக்கியமாய் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com