மூளையின் செயல்திறன்
Brain functionhttps://ta.quora.com

மூளையின் செயல்திறனை உயர்த்தும் 5 வழிமுறைகள்!

Published on

ம் மூளையானது தனது அறிவாற்றல், நினைவுத் திறன், கவனம், மனத்தெளிவு போன்ற அனைத்தையும் ஒருமுகப்படுத்தி கவனம் சிதறாமல் தெளிவுடன் செயல்புரியும்போதுதான் எடுத்த எந்தக் காரியத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும். அவ்வாறான ஒருமுகத் தன்மையின் (Concentration) அளவைக் கூட்ட உதவும் 5 வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

* கிராஸ்வேர்ட் பஸில் (Crossword Puzzle), க்யூப் போன்ற மூளைக்கு பயிற்சியளிக்கும் செயல்களில் ஈடுபட்டு தீர்வு காண முயலும்போது மூளையின் வேலைத்திறன், குறுகிய கால நினைவுத் திறன், செயல்படும் வேகம், ஒருமுகத்தன்மை அனைத்தும் மேம்பாடு அடைய வாய்ப்பு கிடைக்கும்.

* தரமான உறக்கமானது நினைவுத் திறம், எண்ணம், மனநிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மூளையை கவனத்துடனும் மனத் தெளிவுடனும் ஒருமுகத்தன்மை கொண்டு செயல்பட உதவி புரியும்.

* இயற்கையான முறையில் மூளையானது ஒருமுகத் தன்மையுடன் செயல்பட தினமும் வீட்டிற்கு வெளியே சென்று சிறிது நேரத்தை செலவிடுவது நன்மை தரும். அருகில் உள்ள பார்க்கிற்கு சென்று நடைப்பயிற்சி செய்வது அல்லது வீட்டின் காற்றோட்டமான வெளிப்பகுதி அல்லது பால்கனியில் நாற்காலியில் அமர்ந்து இயற்கைக் காற்றை சுவாசிப்பது மூளைக்கு புத்துணர்ச்சி தரும்.

* தினசரி மெடிட்டேஷன் செய்வதும் மூளையை ஒருமுகத்  தன்மையுடன் சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்படச் செய்ய உதவும்.

இதையும் படியுங்கள்:
தனிமை உணர்வை அனுபவிக்கும் பிள்ளைகள்… பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? 
மூளையின் செயல்திறன்

* நமது உணவியல் முறையும், மூளை அறிவாற்றல் மற்றும் நினைவுத் திறம் கொண்டு ஒருமுகத் தன்மையுடன் செயல்படும்போது தாக்கத்தை உண்டுபண்ணச் செய்யும். எனவே, அதிகளவு சர்க்கரை சேர்த்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் அதிகளவு எண்ணெய் அல்லது கொழுப்பு சேர்த்த பிசுபிசுப்புத்தன்மை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நலம் தரும்.

சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகளை உபயோகித்து தயாரிக்கப்படும் உணவுகள் ஆகியவற்றை உட்கொண்டு மூளையின் சிறப்பான செயல்பாடுகளுக்கு நாமும் உதவலாமே!

logo
Kalki Online
kalkionline.com