6 amazing fruits that reduce cholesterol!
6 amazing fruits that reduce cholesterol!

கொழுப்பைக் குறைக்கும் 6 அற்புதப் பழங்கள்!

பழம் சாப்பிடுவதற்கு ஆசையாக இருந்தாலும் அவைகளில் நிரம்பி இருக்கும் கொழுப்புச் சத்தை கணக்கிட்டு நிறைய பழஙகளை ஒதுக்கி விடுபவர்கள் உண்டு. எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து மிக்க பழங்களை சாப்பிடுவது ரத்தத்தில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். அத்தகைய பழங்கள் இதோ.

  1. மாம்பழம்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. இரும்பு ,கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் பார்வை கோளாறு, மாலைக்கண் நோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் மாம்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

  2. ஆரஞ்சு: வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவையும் இதில் உள்ளன. ஆரஞ்சு பழங்களில் பைட்டோஸ் டெரால்ஸ் என்ற பொருள் உள்ளது. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் ஒருவகை கொழுப்பு பொருளாகும். ஆராஞ்சு பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.

  3. பேரிக்காய்: இதில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. எல்டிஎல் எனப்படும் அடர்த்தி குறைந்த கொழுப்பு புரதத்தின் அளவை குறைக்க கூடியது. கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் இதுதான் உடலில் பெரும்பாலான கொழுப்பை உருவாக்குகிறது. உடலில் எல். டி .எல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவு இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும். பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

  4. ஆப்பிள்: இதில் வைட்டமின் ஏ,சி, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. தசைவ வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் உதவுகிறது. ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ் டெரால்கள் அனைத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  5. ஆப்ரிகாட்ஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிப்பதற்கு ஆப்ரிகாட்ஸ் பழங்கள் உதவுகிறது.

  6. ஸ்ட்ராபெர்ரி: இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க கூடியது.

இதையும் படியுங்கள்:
பெங்களூரில் பார்வையாளர்களை அசத்தும் 5 பிரபலமான இடங்கள்!
6 amazing fruits that reduce cholesterol!

இதுபோன்ற பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு ரத்தத்தில் அதிகரிக்கும் கொழுப்பின் அளவை குறைத்து ஆரோக்கியம் காப்போம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com