சரும பளபளப்புக்கு உதவும் பயோட்டின் மற்றும் கொலாஜன் நிறைந்த 6 வகை உணவுகள்!

சரும பளபளப்பு
Skin glow
Published on

யோட்டின் (Biotin) ஒரு B வைட்டமின், கொலாஜன் (Collagen) ஒரு வகை புரோட்டீன் ஆகும். இவை இரண்டுமே நம் உடலின் சருமம், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாய் வைத்துப் பராமரிக்கவும் சருமத்தின் நீட்சித் தன்மையை (Elasticity) மேம்படுத்தவும் உதவுபவை. நம் சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து பளபளப்பு நிறைந்த இளமைத் தோற்றம் பெற  இந்த  இரண்டு சத்துக்களும் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.  பயோட்டின் மற்றும் கொலாஜன் அதிகம் உள்ள 6 வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* காலே, புரோக்கோலி, பசலை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் அதிகளவு பயோட்டின் மற்றும் கொலாஜன் சத்துக்களுடன் மேலும் பல வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் சருமத்தைப் புதுப்பித்து, செல்களைப் பாதுகாக்கவும் சரும ஆரோக்கியம் மேம்படவும் உதவுகின்றன.

* முட்டையின் மஞ்சள் கருவில் பயோட்டின் அதிகம் உள்ளது. வெள்ளைக் கருவில் கொலாஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன.

* தாவர வகைக் கொட்டைகள் மற்றும் விதைகளில் உள்ள நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவை உடலுக்குத் தேவையான பயோட்டின் மற்றும் கொலாஜன் சத்துக்களைத் தரவல்லவை.  பாதாம், முந்திரி, வால்நட், சியா, பூசணி, சூரியகாந்தி மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் மினரல்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவிபுரிகின்றன.

* பயோட்டின் மற்றும் கொலாஜன் உள்ளிட்ட அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மஷ்ரூம்.

* பச்சை, சிவப்பு, மஞ்சள் என பல நிறங்களில் கிடைக்கும் பெல் பெப்பரில் வைட்டமின் A, C மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரியின் கூட்டுப்பொருள்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் பெல் பெப்பரை பயோட்டின் மற்றும் கொலாஜன் நிறைந்த உணவாக ஆக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
தயிர் Vs மோர்: எது உடல் எடை குறைப்புக்கு நல்லது?
சரும பளபளப்பு

* சோயா பீன்ஸ், பீநட் மற்றும் பல பயறு வகைகளில் பயோட்டின் சத்து அதிகம் உள்ளது. பட்டாணி, பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகிய உணவு வகைகளில் உள்ள ஊட்டச் சத்துக்கள், புரோட்டீன், மினரல்கள் மற்றும் நார்ச் சத்துகள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகின்றன.

மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வலிமையான நகங்கள், முடி மற்றும் ஆரோக்கியமான சருமம் பெற்று வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com