தூங்கும்போது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க 6 வழிகள்!

6 ways to prevent facial wrinkles while sleeping
6 ways to prevent facial wrinkles while sleepinghttps://www.southernliving.com

தினமும் தூங்கும்போது நமது முகம் தலையணையில் அழுத்தி நெற்றி மற்றும் கன்னங்களில் ஆழ்ந்த கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றும். வயிற்றில் உள்ளதைப் போல முகத்திலும் கோடுகள் உருவாகி விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். அதைத் தடுப்பது எப்படி என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தூங்கும்போது சுருக்கங்கள் ஏற்பட என்ன காரணம்?

சிலர் தவறான பொசிஷனில் தூங்கும்போது முகத்தில் கோடுகள் ஏற்படும். கொலாஜன் என்கிற ஒரு புரதம் முகத்தை இளமையாக வைக்க உதவுகிறது. முகத்தை தலையணையில் வைத்து அழுத்தி தூங்கும்போது அது கொலாஜனுக்கு எதிராக செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து நெகிழ்ச்சித் தன்மையை இழந்து விடுகிறது. அதனால் முகத்தில் கோடுகள் உருவாகின்றன.

தூங்கும்போது முகத்தில் கோடுகள் உருவாவதைத் தடுக்கும் வழிகள்:

1. இரவு முழுவதும் நன்றாகத் தூங்க வேண்டும். பெரியவர்கள் 7 மணி நேரமும் குழந்தைகள் எட்டில் இருந்து 9 மணி நேரமும் நன்றாகத் தூங்குவது மிகவும் அவசியம். தூக்கமின்மை முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். இதனால் தொங்கும் இமைகள், கண்களின் கீழ் கருவளையங்கள், வீங்கிய கண்கள், முகத்தில் சுருக்கம் போன்றவை தோன்றும். எனவே, ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

2. தூங்கும்போது சிலர் குப்புறப்படுத்து உறங்குவார்கள். அப்போது முகம் தலையணையில் அழுத்தமாகப் படியும். முகத்தில் அதிகமான சுருக்கங்களை இது ஏற்படுத்தும். அதேபோல பக்கவாட்டில் படுத்து உறங்கும்போதும் முகம் தலையணை மற்றும் படுக்கையில் அழுத்தமாகப் படிந்து சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, நேராக, மல்லாக்கப் படுக்கலாம்.

3. ஒருசாய்த்து படுக்கும்போது சரியான பொசிஷனில் படுக்க வேண்டும். முகத்தை தலையணையில் அழுத்தி வைக்காமல் மென்மையாக வைத்து முழங்கால்கள் அல்லது கீழ் முதுகின் கீழ் ஒரு தலையணையை வைத்து உறங்க வேண்டும். உடலின் இரு புறமும், குறிப்பாக உடலின் நடுப்பகுதி மற்றும் இடுப்புப் பகுதியை சுற்றி தலையணைகளை வைத்து உறங்கும்போது முகம் தலையணையில் அழுந்தாது. சுருக்கமும் ஏற்படாது. பக்கவாட்டில் அல்லது ஒருசாய்த்து படுக்கும்போது கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாகும். அங்கு சிறிய தலையணை வைத்து உறங்குவது நல்லது. இல்லையென்றால் கழுத்துக்குக் கீழே கோடுகள் உருவாகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலும் அலுவலகத்திலும் நோ சூடு; நோ சொரணை!
6 ways to prevent facial wrinkles while sleeping

4. தலையணை உறை பருத்தியால் ஆனதாக இல்லாமல் பட்டு அல்லது சாட்டின் துணியை பயன்படுத்தலாம். அது அவ்வளவாக முகச்சுருக்கத்தை ஏற்படுத்தாது.

5. முகத்தில் வைட்டமின் ஏ கிரீமை தடவிக் கொண்டு உறங்கலாம். அது மெல்லிய கோடுகள் ஏற்படுவதை தடுக்கும். கொலாஜனை தூண்டிவிடும் அதனால் முகம் இளமையாகக் காட்சி அளிக்கும்.

6. சிலர் தலைமுடியை விரித்துப் போட்டு அதன் மேல் முகத்தை வைத்து அழுத்தி உறங்குவார்கள். அதனால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். உறங்கும்போது தலை முடியை நன்றாக பின்னிக்கொண்டு முகத்தை மென்மையாக தலையணையில் வைத்து உறங்குவது சிறந்த வழி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com