மழைக்கால சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 6 எளிய வழிமுறைகள்!
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக அடிக்கடி உடலில் சருமம் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் ரேஷஸ் வரக்கூடும். மழைக்கால சருமப் பிரச்னைகளை தடுப்பது எப்படி என்றும் அதற்கான சிகிச்சை முறைகள்பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சருமப் பராமரிப்பு: மழைக்காலத்தில் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் அவசியமாகும். இரண்டு முறை குளிப்பதால் சரும துவாரத்தில் அடைத்திருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகளை நீக்க முடியும். குளித்து முடித்த பிறகு நன்றாக உடலில் ஈரம் போகும்படி மென்மையான துண்டை வைத்து துவட்டி விடுவது நல்லது. இது பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் சருமத்தில் உருவாவதைத் தடுக்கும்.
2. சரியான உடைகளை தேர்வு செய்யவும்: மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க தளர்வான காட்டன் துணிகளை அணிவது சிறந்ததாகும். இதுவே சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். Synthetic fabrics போன்ற உடைகளை அணிவதால் சருமப் பிரச்னை வரக்கூடும். அதனால், அதை தவிர்த்து விடுவது சிறந்தது. மழையில் நனைந்துவிட்டால், ஈரமான உடையை அதிக நேரம் அணியாமல் உடனேயே மாற்றிவிடுவது சிறந்தது.
3. மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தவும்: மழைக்காலத்தில் சருமத்தை ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்தான். இருப்பினும், சருமத்திற்கு மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவதன் மூலம் வறட்சி மற்றும் எரிச்சலில் இருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
4. கால்களின் பாதுகாப்பு: மழைக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படக்கூடியது கால்கள்தான். அதனால் வெறும் கால்களில் நடக்காமல் Waterproof காலணிகளை அணிந்து கொள்வது சிறந்தது. வீட்டிற்கு வந்ததும் கால்களை நன்றாக கழுவி விட்டு உலர விட்ட பிறகு Anti fungal powderஐ விரல்களின் இடுக்கில் போடுவது கால்களை பாதுகாக்க சிறந்த வழியாகும்.
5. ஆரோக்கியமான உணவுகள்: உணவில் வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால், நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிகமாக தண்ணீர் அருந்துவது சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
6. அரிப்பிலிருந்து பாதுகாத்தல்: மழைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் அரிப்பை சொரிந்து விடுவதால் சருமத்தில் தடிப்பு ஏற்பட்டு நோய் தொற்று வரக்கூடும். இவ்வாறு சருமத்தில் அரிப்பு ஏற்படும் போது Anti itching cream ஐ பயன்படுத்த வேண்டும். நகத்தை சிறிதாக வெட்டிக்கொள்வதும், சொரியும்பொழுது சருகத்தில் அதிகமாக தடிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். இந்த 6 வழிமுறைகளையும் பின்பற்றி மழைக்காலத்தை சருமத்தை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.