கோடையில் எவ்வளவுதான் நீர் குடித்தாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து டீஹைட்ரேட் ஆகாமல் இருக்க எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களை பருக உடல் நீர்ஏற்றத்துடன் இருக்கும்.
தேவையானவை:
வெள்ளரி துண்டுகள் ஒரு கப்
ஐந்தாறு புதினா இலைகள்
தேவையான உப்பு
ஒரு ஸ்பூன் மிளகு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து சில்லென்று பிரிட்ஜில் வைத்து குடிக்கலாம் அல்லது அப்படியே பருகலாம். இந்த பானம் உடல் எடை குறைக்கவும் வெயிலுக்கு தாகம் தணிக்கவும் உதவும். இந்த ஜூஸை பருவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
தேவையானவை:
அரை நெல்லிக்காய் - 1/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
விருப்பமான எஸன்ஸ் - 1 ஸ்பூன்
செய்முறை:
கலர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. இட்லி தட்டில் நெல்லிக்காய்களை அலம்பி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் அடித்து கூழாக்கவும். அரைக் கப் தண்ணீரில் சர்க்கரையை சேர்த்து கம்பி பதம் வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வப்போது மறக்காமல் கிளறி விடவும். விருப்பமான எசன்ஸ் சேர்த்து ஆறியதும் எடுத்து பத்திரப்படுத்தவும். தேவைப்படும் சமயம் 1/4 கப் ஜூஸுடன் குளிர்ந்த நீர் கலந்து பருகவும். அமர்க்களமான ருசியில் இருக்கும் இந்த நெல்லி ஜூஸ். இதே போல் பெரிய நெல்லிக்காயிலும் (ஆம்லா) செய்யலாம்.
தேவையானவை:
மாங்காய் - 1
உப்பு - சிறிது
சர்க்கரை - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
புதினா இலைகள் - 6
சோடா - 1
செய்முறை:
அதிகம் புளிப்பில்லாத கிளி மூக்கு மாங்காய் ஒன்றை தோல் சீவி துண்டுகளாக்கி விடவும். மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை, புதினா இலைகள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். இதனை வடிகட்டி தேவையான அளவு சோடா சேர்த்து பருக வெயிலுக்கு மிகவும் இதமான மாங்காய் லெமன் சோடா தயார்.
தேவையானவை:
செம்பருத்தி பூக்கள் - 5
புதினா - சிறிது
உப்பு - சிறிது
எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கருப்பு உப்பு (காலா நமக்) - சிறிது
செய்முறை:
ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து பருக உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
கற்றாழை மடல்களில் இருந்து சதைப்பகுதியை எடுத்து நன்கு அலம்பி ஜூஸ் போட்டு பருக உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன் ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.
இயற்கை அளித்த நன்கொடையில் இந்த இளநீரும் ஒன்று. பொட்டாசியம் நிறைந்த இளநீர் தாகத்தை தணிப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
நமக்கு விருப்பமான பழங்கள் இரண்டு மூன்று எடுத்து இரண்டு சிட்டிகை உப்பு, நாட்டு சக்கரை, விருப்பப்பட்டால் ஒரு துண்டு ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் அடித்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். தாகம் தணிப்பதுடன் உடலுக்குத் தேவையான சத்தும் கிடைக்கும்.