மூளை ஆரோக்கியமாக செயல்பட பின்பற்ற வேண்டிய 7 பழக்க வழக்கங்கள்!

ஆரோக்கியமான மூளை
ஆரோக்கியமான மூளைhttps://www.thequint.com
Published on

‘எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்றொரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழியை கொஞ்சம் மாற்றி, 'சிரசுக்குள் இருக்கும் மூளையே பிரதானம்' எனலாம். ஏனெனில், காலத்திற்கேற்ப முன்னேற்றம் கண்டுள்ள கணினி அனைத்து இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், மூளை உடலின் அனைத்து உறுப்புகளின் இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருப்பதால் எனலாம். இப்பேர்ப்பட்ட பொறுப்பில் உள்ள மூளையானது எந்த வயதிலும், எந்த நேரத்திலும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய 7 பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உடற்பயிற்சி: தினசரி உடற்பயிற்சி மற்றும் உடலின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் மூளைக்குள் உருவாகும் புதிய செல்கள் ஆரோக்கியமாய் வளரும். மூளையின் மொத்த அறிவாற்றல் திறனும் செயல்பாடுகளும் மேன்மை அடையும்.

2. ஆரோக்கியமான உணவு: மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் புரோட்டீன் போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்த திட்டமிட்ட உணவை உட்கொள்ளுதல்.

3. மனத் தூண்டுதல்: மனதை ஒருமுகப்படுத்தி மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய புதிர்களை விடுவிப்பது, புதிய திறமைகளை கற்றுத் தெளிவது, விளையாட்டுக்களில் ஈடுபடுவது போன்ற செயல்களை அவ்வப்போது செய்வதால் மூளை ஊக்கமும் உற்சாகமும் பெறும்.

4. சமூகத் தொடர்பு: நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது மற்றும் பல சோஷியல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் இணைந்து செயலாற்றுவது போன்றவை, புத்தி கூர்மை பெறவும், ஸ்ட்ரெஸ் மற்றும் கஷ்டம் வரும் காலங்களில் அவற்றிலிருந்து விடுபட நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
தீய சக்திகளை விரட்டும் மூலிகை சாம்பிராணி!
ஆரோக்கியமான மூளை

5. தரமான தூக்கம்: போதுமான அளவு அமைதியான ஆழ்ந்த தூக்கம் பெறுவது, நினைவாற்றலை ஒருங்கிணைக்கவும், ஒட்டுமொத்த மூளையின் ஆரோக்கியத்திற்கும் பயன்படும்.

6. ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்: நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் அதன் விளைவாக வரும் தீங்குகளிலிருந்து விடுபட மெடிடேஷன், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற உத்திகளைப் பின்பற்றி நலமடையலாம்.

7. ஹைட்ரேஷன்: மூளைக்குத் தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்காதபோது அது டீஹைட்ரேட் ஆகும் வாய்ப்பு உண்டாகும். அப்போது மூளையின் அறிவாற்றல் குறையும்; கவனக்குறைவு ஏற்படும். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து, மூளை எதிர்திசையில் பயணப்படுவதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியம்.

மேலே கூறிய முறையில் நம் பழக்க வழக்கங்களை அமைத்துக்கொண்டால் நம் மூளை என்றும் இளமைத் துள்ளலுடன் செயல்படும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com