பற்களின் பளபளப்பிற்கும் வெண்மைக்கும் உதவும் 7 மூலிகைகள்!

பளிச் பற்கள்
பளிச் பற்கள்https://tamil.boldsky.com

ம் அனைவரின் முக அழகை உயர்த்திக்காட்டுவது கண்களுக்கு அடுத்தபடியாக பற்கள் எனலாம். பேசும்போதும், சிரிக்கும்போதும் வெளியில் தெரியும் பற்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் அவசியம். மேலும், செரிமான செயல்பாடுகளிலும் முன்னிலையில் நிற்பவை நம் வாயும் பற்களுமே எனலாம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பற்களை ஆரோக்கியத்துடன் வைத்துப் பராமரிக்க நம் முன்னோர்கள் பல வழிமுறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். அவற்றுள் சில மூலிகைகளும் இடம்பெற்றுள்ளன. அம்மூலிகைகளின் பயன்கள் மற்றும் அவற்றை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்ட லவங்கம் (Clove) பொதுவாக ஈறு மற்றும் பற்களில் உண்டாகும் வலியை குணப்படுத்தக் கூடியது. லவங்க எண்ணெயை சிறிதளவு எடுத்து உபயோகிப்பது பற்களுக்கு வெண்மை தரும்; வாய் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

* தேங்காய் ஓடு போன்ற ஆர்கானிக் பொருட்களிலிருந்து பெறப்படும் செயல்படுத்தப்பட்ட கரியை (Activated Charcoal) தூளாக்கி பல் துலக்கும்போது பற்களிலுள்ள கறை நீங்கும். பற்கள் வெண்மை பெறும். நச்சுக்களை கரித்தூள் காந்தம் போல் ஈர்த்தெடுத்து வெளியேற்றும்.

* வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல் குணம் நிறைந்துள்ளது. பற்களின் பாதுகாப்பிற்கும், ஈறுகளில் உண்டாகும் கோளாறுகளை குணப்படுத்தவும், பொதுவான வாய் சுகாதாரத்தைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. வேப்ப மரத்தின் குச்சிகளால் நம் முன்னோர்கள் பல் துலக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

* ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டது மஞ்சள். பல காலமாகவே இது பற்களை சுத்தப்படுத்தவும், ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

* ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்ட துளசியின் இலைகளை நசுக்கி பற்களிடையே வைத்துக்கொண்டால் பற்கள் இயற்கை முறையில் வெண்மை பெறும்; ஒட்டு மொத்த வாய்ப் பகுதியும் ஆரோக்கியமடையும்.

இதையும் படியுங்கள்:
கடலருகிலிருந்தும் சுனாமி தாக்காத திருத்தலம்!
பளிச் பற்கள்

* ஸ்ட்ராபெரி பழங்களிலுள்ள மாலிக் ஆசிட் பற்களின் ஓரங்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கவல்லது. இப்பழத்தை நசுக்கி பேஸ்ட் போலாக்கி பற்களின் மீது தடவி பற்கள் கறை நீங்கி வெண்மை பெற உபயோகித்து வருகின்றனர் சிலர்.

* சேஜ் (Sage) என்னும் மூலிகைத் தாவரத்திலுள்ள எண்ணெய்ப் பசையானது வாயினுள் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும். சேஜ் இலைகள் பற்களை வெண்மையாக்கும் குணம் கொண்டது.

இந்த இலைகளைப் பயன்படுத்துவதால் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com