வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!

வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!

டுமையான கோடை வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்க எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். உடலின் ஐம்புலன்களில் ஒன்றான கண்களுக்கு எந்த உபாதையும் வராமல் பார்த்துக்கொள்வது நம் தலையாய கடமையாகும். தவிர்க்க முடியாத சில வேலைகள் நிமித்தம் கோடையிலும் நாம் வெளியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாவது சகஜம். கண்களைப் பாதுகாக்க உதவும் 7 ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கண்களைக் கூச வைக்கும் சூரியக் கதிர் வீச்சிலிருந்து நூறு சதவிகிதம் பாதுகாப்பு பெற, கண்களை முழுவதும் மறைக்கும் அளவு பெரிய சைஸ் சன் கிளாஸ் அணிவது பயன் தரும்.

சூரிய வெளிச்சம் நேரடியாகக் கண்களைத் தாக்காதிருக்க அகலமான ஓரங்களைக் கொண்ட தொப்பி அணிவது கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரும்.

தேவையான அளவு தண்ணீர் குடித்து, கண்கள் ஈரப்பசையுடன் இருக்கும் அளவுக்கு உடலை நீரேற்றத்துடன் வைப்பது ஆரோக்கியம் தரும். கண்கள் நாலாபுறமும் நகரும்போது உராய்வேதுமின்றி சுகானுபவம் பெறும்.

கண்களில் வறட்சித் தன்மையை உணரும்போது மருத்துவரின் ஆலோசனை பெற்று, செயற்கை லூப்ரிகேட்டிங் ஐ ட்ராப்ஸ் உபயோகிக்கலாம்.

சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில், அதாவது காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
விடாமல் துரத்தும் நிழல் எப்போது மறையும்?
வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!

வீட்டுக்குள் இருக்கும்போது, வெப்பக் காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, ஹுமிடிஃபையர் (Humidifier) உபயோகித்து கண்களை ஈரத் தன்மையுடன் வைத்துப் பராமரிக்கலாம்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் டாக்டரிடம் சென்று கண்களைப் பரிசோதிக்கச் செய்து கண்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்வது மிக்க பலன் தரும். குறை ஏதுமிருந்தாலும் நிவர்த்தி செய்துகொள்ள ஏதுவாகும்.

கண்களின் ஆரோக்கியம் காப்பதில் அனைவரும் கவனம் செலுத்தி கவலையின்றி வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com