வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிடுவதால் ஏற்படும் எட்டு நன்மைகள்!

Curry Leaves
Curry Leaves
Published on

தினமும் கருவேப்பிலையை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தொப்பை குறையும்: ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் பொதுவாக அவர்களுக்கு இருக்கின்ற ஒரு பிரச்னை தொப்பை. தொப்பையை வைத்துக்கொண்டு வெளியே நடமாடவே தயங்குவார்கள். இனி, கவலையே வேண்டாம். தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி, தொப்பையை குறைப்பதற்கு உதவுகிறது.

இரத்த சோகைக்கு: இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இரத்த சோகை பிரச்னை சீர்படும்.

சர்க்கரை நோய்க்கு: சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.

இதயத்தைப் பாதுகாக்க: கருவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

செரிமான பிரச்னைக்கு: செரிமான பிரச்னை உள்ளவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்னை சரியாகும்.

சளி தொல்லைக்கு: சளி தொல்லை உள்ளவர்கள் கருவேப்பிலையை காயவைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு வேளை ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெறலாம்.

முடி நன்றாக வளர்வதற்கு: முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் தினமும் 15 கருவேப்பிலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்னை சரியாவதோடு, அடர்த்தியாக முடி வளர்வதையும் உணர முடியும். நரைத்த முடி கருமையாக மாறும்.

கல்லீரலைப் பாதுகாக்க: கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் தேங்கி இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றி கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது.மேலும், கருவேப்பிலையில் இருக்கும் விட்டமின் A மற்றும் C கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com