நுரையீரல் ஆரோக்கியம் காக்க உதவும் 8 வகை உணவுகள்!

Healthy Lungs
Lungs
Published on

ம் உடலின் உள்ளுறுப்புகளில் மிக முக்கியமான பணிகளை சிறப்புறச் செய்து கொண்டிருப்பவைகளில் ஒன்று நுரையீரல். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் சக்தியையும் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனை வெளியிலிருந்து உள்ளிழுத்து அனுப்புவதும் அசுத்தக் காற்றை உள்ளிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் வேலையாகும். இத்தகைய சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கும் நுரையீரலை நல்ல முறையில் பாதுகாப்பது நமது கடமையாகும். அதற்கு நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 8 வகை உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தண்ணீர்: நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துப் பராமரிக்க மிகவும் உதவும். எனவே, தினசரி எட்டு டம்ளருக்குக் குறையாமல்  தண்ணீர் குடிப்பது அவசியம்.

2. பழங்கள் மற்றும் காய்கறிகள்: வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதால் உடலிலுள்ள வீக்கங்கள் குறையும். மேலும், அவை நுரையீரல் திசுக்களைப் பாதுகாக்கவும் உதவும்.

3. வெங்காயம், பூண்டு: வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டிலும் சல்ஃபர் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் கொண்டது. இவற்றை உட்கொள்வதால் மூச்சுப் பாதை ஆரோக்கியம் சிறந்த முறையில் பாதுகாக்கப்படும்.

4. இஞ்சி: இஞ்சியிலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இவை சுவாசப் பாதையில் எரிச்சலுடன் கூடிய வீக்கம் இருந்தால் அவற்றை நல்ல முறையில் குணப்படுத்தி நுரையீரல் இயக்கங்கள் சிரமமின்றி நடைபெற உதவும்.

5. மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் என்ற சக்தி வாய்ந்த கூட்டுப்பொருள் உள்ளது. இதிலும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உள்ளன. இவை நுரையீரலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கும் செயல்பாட்டில் சிறப்பாகப் பங்கேற்று உதவி புரியும்.

6. க்ரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இது நுரையீரல் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்க பெரிதும் உதவி புரியும்.

இதையும் படியுங்கள்:
மனச்சோர்வின் மறைமுகமான 10 அறிகுறிகள் எவை தெரியுமா?
Healthy Lungs

7. கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள், பூசணி விதைகள் போன்றவற்றில் வைட்டமின் E அதிகம். மேலும், இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரல் செல்கள், தீங்கிழைக்கும் ஃபிரீரேடிக்கல்கள் மூலம் சேதமடையாமல் பாதுகாக்க உதவும்.

8. யோகர்ட் மற்றும் கெஃபிர் (Kefir): இவற்றில் உள்ள புரோபயோட்டிக்ஸ் செரிமானம் சிறந்த முறையில் நடைபெற உதவும். இதனால் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நுரையீரலில் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

மேலே கூறிய உணவுகளை தினசரி உணவில் சேர்த்து உட்கொண்டு நுரையீரல் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவி புரிவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com