பூண்டு ஜூஸில் இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

8 Health Benefits of Garlic Juice
8 Health Benefits of Garlic Juicehttps://livelovefruit.com

பாலில் பூண்டுப் பற்கள் சேர்த்துக் காய்ச்சி இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது ஆழ்ந்த உறக்கத்தைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. காலையில் வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் எட்டு ஆரோக்கிய நன்மைகள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம்.

* காலையில் வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் அருந்தும்போது நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி அதிகரிக்கிறது. இதனால் நம் உடலுக்குள் சுலபமாக நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொற்றுநோய்க் கிருமிகளுடன் போராடி நோய் வராமல் தடுக்க முடிகிறது.

* பூண்டு ஜூஸ், நாம் உட்கொள்ளும் உணவுகள் வயிற்றில் ஜீரணமாக உதவும் அமிலங்களின் உற்பத்தியைப் பெருகச் செய்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

* பூண்டில் அடங்கியுள்ள சல்ஃபர் என்ற கூட்டுப் பொருளானது, கல்லீரல் மேற்கொள்ளும் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் உறுதுணையாய் இருந்து நச்சு முழுவதுமாக வெளியேற உதவுகிறது. வெறும் வயிற்றில் குடிக்கும்போது நச்சுக்களின்றி உடல் நன்கு சுத்தமடைகிறது.

* பூண்டு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி பாய உதவுகிறது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் குடிப்பதால் இதய நோய்கள் வரும் ஆபத்து தடுக்கப்படுகிறது.

* பூண்டு இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் குடிப்பது வீக்கங்களைக் குறைக்கவும், அது சம்பந்தமாக உண்டாகும் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
புத்தகம் வாசிப்பதில் இத்தனை நன்மைகளா?
8 Health Benefits of Garlic Juice

* பூண்டு ஜூஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸினால் உண்டாகும் செல் சிதைவுகளைத் தடுக்க உதவிபுரிந்து சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வல்லவை. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் குடிப்பது மாசு மருவற்ற ஆரோக்கியமான சருமம் பெற உதவுகிறது.

* பூண்டு மெட்டபாலிஸ அளவை அதிகரிக்க உதவும் குணம் கொண்டது. இதனால் சேமிப்பிலிருக்கும் கொழுப்பு அதிகளவு எரிக்கப்பட்டு எடையைக் குறைப்பதற்கும் பூண்டு உதவுகிறது. அந்த நாளின் மெட்டபாலிஸம் நல்ல முறையில் நடைபெற வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் குடிப்பது நல்ல ஆரம்பமாகும்.

* வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் அருந்துவது மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. இதனால் மூளையின் அறிவாற்றல் திறனும் அதிகரிக்கிறது.

வெறும் வயிற்றில் அருந்தும் பூண்டு ஜூஸ் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் தருமென்றால் நாமும் அந்த முறையைப் பயன்படுத்தி நலம் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com