இரசாயனம் நிறைந்த இந்த 9 வகை உணவுப் பொருட்களையா காசு கொடுத்து வாங்கறீங்க?

instant noodles
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்கள்https://e.vnexpress.net
Published on

நாம் காசு கொடுத்து கடையில் வாங்கும் அத்தனை உணவுப் பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் தரும் என்று நம்புகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. சில உணவுப் பொருட்களை கட்டாயமாக கடையில் வாங்கி சாப்பிடக்கூடாது. அது ஏன் என்பதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. தயிர்: பொதுவாக, கடைகளில் வாங்கும் தயிர் உண்மையான தயிரே அல்ல. அதில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் வீட்டிலேயே தயிரை தயாரித்து உண்பதுதான் நல்லது. அதில் உடலுக்கு நன்மை தரும் புரோபயோடிக்குகள் உள்ளன.

2. ரெடிமேட் சாலட் டிரெஸ்ஸிங்: ரெடிமேட் சாலட் டிரெஸ்ஸிங் என்பது சாலடுகளில் கலக்கப் பயன்படும் சாஸ் வகையைச் சேர்ந்தது. சாலடுகளுக்கு சுவை ஈரப்பதம் மற்றும் வடிவமைப்புக்கு அழகு சேர்க்க இவை உதவுகின்றன. பாட்டிலில் அடைக்கப்பட்டு ப்ராசஸ் செய்யப்பட்டு வருகின்றன. இவை கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய பிரிசர்வேட்டிவ்கள், செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். உண்பதற்கு சுவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

3. சோடா: உண்ட உணவு செரிமானம் ஆக வேண்டும் என்று சிலர் சோடா குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதில் இனிப்புக்காக சர்க்கரை, செயற்கை நிறமூட்டிகள்,  பாஸ்பாரிக் ஆசிட், காஃபின் முதலியவை சேர்க்கப்படுகின்றன. நார்வே, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் இவை தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

4. குக்கிகள்: பேக் செய்யப்பட்ட குக்கிகளில் எப்போதும் பிரஷ்ஷாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பிரிசர்வேட்டிகள் கலக்கப்பட்டு இருக்கும். மேலும், நிறைய இனிப்புகள், சுவைக்காக சுவையூட்டிகளும் சேர்க்கப்படும். மிகக் கெடுதலான இவற்றை உண்டால் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுதல், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவை வரலாம்.

5. தாவர எண்ணெய்கள்: இவை விரிவான இரசாயன செயலாக்கத்திற்கு உட்படுகின்றன. ஹெக்சேன் என்கிற ஒரு வகை கரைப்பான், தாவரங்களிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையான செக்கிலாட்டப்படும் எண்ணெய் போல அல்லாமல் இருப்பதால் உடலுக்கு பலவித தீமைகளைத் தரும்.

6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி: இதில் நைட்ரேட்டுகளும் பாஸ்டேட்டுகளும் இருக்கும். கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவற்றை இதில் கலப்பார்கள். இது புற்றுநோய்க்குக்  கூட வழிவகுக்கும். இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் ஆனால்..?
instant noodles

7. பாக்கெட் சீஸ்: பாக்கெட்டுகளில் வரும் சீஸ்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவை குழந்தைகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை உண்ணும் குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று ஹைதர் ஆக்டிவாக இருப்பார்கள். அவர்களின் நடத்தை மாறுபாடுகளுக்கு இது முக்கியக் காராணமாக அமைகிறது.

8. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்கள்: இவை அதிகமாக பிராசஸ் செய்யப்படும் உணவுகளில் ஒன்று. இதில் சோடியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஏற்படலாம். இதன் சுவை காரணமாக குழந்தைகள் நூடுல்ஸ்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்கவும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் இதில் கிடையாது. குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நடத்தை மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும்.

9. டொமேட்டோ சாஸ்: இதில் கலந்திருக்கும் இரசாயனம் ஹார்மோன்களை தாக்கும் அபாயம். கொண்டது. மேலும், இதய நோய்கள், மார்பக புற்றுநோய், அதீத உடல் எடையை தரும் அபாயம் உள்ளது.

சிப்ஸ்கள்: பாக்கெட் சிப்ஸ்கள், பார்பிக்யூ வாங்கும் சீஸ் சுவை கொண்ட சிப்ஸ்கள் முழுக்க முழுக்க கொழுப்பு, அதிக உப்பு மற்றும் செயற்கை சுவையூட்டிகளால் ஆனது. இதனால் அதிக உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் கூட வரலாம். எனவே, இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com