டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் கணினி கண்ணாடிகளின் 9 பயன்கள்!

9 Uses of Computer Glasses That Lead to Digital Health!
9 Uses of Computer Glasses That Lead to Digital Health!https://www.eyesolutions.in
Published on

ன்றைய டிஜிட்டல் யுகத்தில் நம் வாழ்க்கை கணினிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்டிவிகள் என சுழல்கின்றது. இந்த சாதனங்கள் உமிழும் நீல ஒளி தீங்கு விளைவிக்கும் அளவிற்கு தொடர்ந்து அவற்றை பயன்படுத்துகிறோம். இதனால் கண் சோர்வு, வறட்சி, மங்கலான பார்வை மற்றும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், கணினி கண்ணாடிகள் டிஜிட்டல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பொருளாகும்.

1. டிஜிட்டல் சாதனங்கள் உமிழும் நீல ஒளியை கணினி கண்ணாடிகள் வடிகட்டுகின்றன. இதனால் நீண்ட நேரம் திரையைப் பார்த்தாலும் தலைவலி வருவது தடுக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது.

2. கணினி கண்ணாடிகளை அணிந்து கொண்டு கணினி திரையையோ அல்லது ஸ்மார்ட் ஃபோனையோ பார்க்கும்போது காட்சிகள் திரையில் தெளிவாகத் தெரிகின்றன.

3. இவை கண் சோர்வை நீக்குகிறது. கண் கூசுவதை தடுக்கின்றன. வசதியாக ஸ்கிரீனை பார்க்க வழிவகை செய்கிறது.

4. டிஜிட்டல் திரை வெளியிடும் நீல ஒளி உடலின் இயற்கையான தூக்க சுழற்சியை பாதிக்கிறது. ஆனால், கணினி கண்ணாடியை அணியும்போது இது தடுக்கப்பட்டு தூக்கத்தை பாதிக்காமல் நல்ல தூக்கத்தைத் தருகிறது.

5. டிஜிட்டல் திரையை பார்க்கும்போது கண்கள் உ லர்ந்து விடும். ஏனென்றால், கண் சிமிட்டாமல் நாம் திரையை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம். ஆனால், இந்தக் கண்ணாடிகள் கண்கள் உலர்ந்து போவதை தடுக்கிறது.

6. இவை அணிவதற்கு சௌகரியமாகவும் மற்றும் கண் சோர்வை குறைப்பதாலும் நாம் கணினியில் வேலை செய்யும் நேரம் அதிகரிக்கிறது. மிகவும் திறமையாகவும் அதிக கவனத்துடன் வேலை செய்ய உதவுகிறது. வேலை செய்தாலும், படித்தாலும் அல்லது டிஜிட்டல் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், கணினி கண்ணாடிகள் மேம்பட்ட உற்பத்தித் திறனுக்கு வழிவகுக்கும்.

7. கணினி கண்ணாடிகள் கண்களுக்கும் கணினிக்குமான தூரத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு இனிமையான இடைவெளியை ஏற்படுத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

8. இந்தக் கண்ணாடியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட லென்சுகள் உள்ளன. இவை பார்வை கூர்மையை மேம்படுத்தும் விதத்தில் இருக்கின்றன. இது படிப்பதையும் பார்ப்பதையும் எளிதாக்குகிறது. அதிக தெளிவு மற்றும் கூர்மையை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகரநெடுங்குழைக்காதர் பெருமாளுக்கு ஏன் அப்பெயர் ஏற்பட்டது தெரியுமா?
9 Uses of Computer Glasses That Lead to Digital Health!

9. அதிக நேரம் டிஜிட்டல் திரையை பார்ப்பதால் கிட்டப்பார்வை மற்றும் கண் தொடர்பான நோய்கள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால், கணினி கண்ணாடிகள் இந்த ஆபத்துகளை குறைத்து ஆரோக்கியமான கண் பார்வையை வழங்குகின்றன.

கணினியில் வேலை செய்யும்போது இருட்டு அறையில் அமர்ந்து வேலை செய்யக்கூடாது. அறை வெளிச்சமாக இருக்க வேண்டும். 20 - 20 - 20 விதியை பின்பற்றுவது அவசியம். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள பொருளை 20 நொடிகள் பார்க்க வேண்டும். இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com