உடலுக்குள் ஒளிந்திருக்கும் வெடிகுண்டு! எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!

Aneurysms symptoms and cure
Aneurysms
Published on

அன்யூரிசம் மூளையில் ஏற்படும் இந்த நிலைமை மிகவும் ஆபத்தான தாக்கமாகக் கருதப்படுகிறது‌. ஏனென்றால் இந்த நிலைமை ஏற்படுவதற்கு முன் பெரும்பாலும் எந்த அறிகுறியும் தென்படுவதில்லை‌. மூளையில் உள்ள இரத்த நாளங்கள் பலவீனப்படும் போது இந்த நிலைமை ஏற்படுவதாக அறியப்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த பிரச்னை வெளியே தெரியாமலேயே இருக்கும்.

இந்த Aneurysms என்பது மிகச் சிறிய அளவில் இருக்கும். இதனால் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படாது. சிலர் தலைவலி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்காக ஸ்கேன் எடுக்கும் போது இது தெரிய வரும். இதன் அளவில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இரத்த நாளம் வெடித்து இரத்தக்கசிவு ஏற்படும். இதை Subarachnoid hemorrhage என்று கூறுவார்கள். இது உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

இந்த அன்யூரிசம் என்பது எந்தவித அறிகுறிகளைக் காட்டாமல் திடீரென இரத்த நாளம் வெடித்து ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்த இரத்த நாளம் பலவீனத்திற்கு பல காரணிகள் உள்ளன. பரம்பரையாக இது ஏற்படுவதும் உண்டு. சிலருக்கு பிறக்கும் போதே பிரச்னையாக இருக்கும். இது பல வருடங்கள் அதே நிலையில் இருக்கலாம்‌. பல நாட்கள் கழித்து சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்‌.

ஹைபர் டென்ஷன்

அதிக இரத்த அழுத்தத்தால் தமனி பாதிக்கப்படும் போது இந்த பாதிப்பு ஏற்படலாம்‌. பொதுவாக தமனிகள் கிளைகளாக பிரியும் இடத்தில் தான் பாதிப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது. இந்த Aneurysm என்பது புகைப் பிடிக்கும் பழக்கத்தால் கூட ஏற்படலாம்‌. 'எண்டோதிலியம்' என்ற இரத்த நாளம் பாதிப்புக்குள்ளானதாலும் இது ஏற்படலாம்‌. வயது காரணமாகவும் இது ஏற்படலாம். பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு‌. ஆனால், இதைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சிகள் அறியப்படாமல் உள்ளன.

மிகக் கடுமையான தலைவலியை thunderclap headache என்று கூறுவார்கள். இத்தகைய வலியினால் பாதிப்பு ஏற்படலாம்‌. இதை Ruptured aneurysms என்று கூறுவர். அன்யூரிசம் இதயம், வயிறு மூளை மற்றும் கால்களிலும் ஏற்படலாம்‌. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அன்யூரிசம் பெருநாடியில் ஏற்படுகிறது. ஆனால், அது எந்த இரத்தக் குழாயிலும் ஏற்படலாம்‌.

அன்யூரிசம் அறிகுறிகள் அதன் இருப்பிடமாக மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். அதன் வளர்ச்சியைக் கண்காணிக்க வழக்கமான ஸ்கேன் தேவைப்படலாம்‌.

பிரச்னைக்கான அறிகுறிகள்

இதயத்துடிப்பு அதிகரித்தல், திடீரென்று வயிறு, தலை மற்றும் மார்பில் வலி வருதல், திடீரென்று நினைவிழப்பு, முழுசாக முடியாமல் இருப்பது, சோர்வு, தலைவலி, வாந்தி.

எண்டோ வாஸ்குலர் காய்லிங்

இது மூளை அன்யூரிசத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது‌. இதன் மூலம் இரத்தம் பாய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. சில நோயாளிகளுக்கு தனிப்பட்ட உடற்கூற்றியல் அல்லது கொலாஜனை பாதிக்கும் நோய்களால் எண்டோவாஸ்குலர் நுட்பங்களை பயன்படுத்த முடியாத நிலையில் திறந்த அறுவை சிகிச்சை முறையில் அன்யூரிசம் பழுது பார்க்கப்படுகிறது‌.

மைக்ரோ வாஸ்குலர் க்ளிப்பிங்

உலோக க்ளிப் மூலம் அன்யூரிசம் கட்டுப்படுத்தப்படுகிறது‌.

உடல் செயல்பாடு இல்லாதது அன்யூரிசம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் அன்யூரிசம் தொடர்புடையது‌. மோசமான உணவுத் தேர்வு அன்யூரிசம் உருவாக காரணமாகிறது. வாழ்க்கை முறை மாற்றங்களில் இதை தவிர்க்கலாம்‌.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com