ஒவ்வொரு நிறத்திலும் ஒரு சத்து: 5 வண்ணக் காய்கறிகளின் மகத்துவம்!

5 colored vegetables
5 colored vegetables

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரே விஷயம் உணவு கட்டுப்பாடு. நமது உடலுக்கு தேவையான சமச்சீர் சத்துக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் நமது அன்றாட இயக்கம் மற்றும் நமது உடல் எவ்வித நோய் தாக்குதலும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதற்கும் அந்த உணவுகளே உதவுகிறது என்கிறது மருத்துவம்.

இந்த சமச்சீர் சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்து நாம் அவர்களுக்கு பழக்கி விட்டால் பின் நாட்களில் உடல் ஆரோக்கியம் அவர்களுக்கு சீராக மேம்படும். இதற்கு என்ன வழி? என்று கேட்டால் ஒரே குரலாக "எல்லா வண்ணங்களிலும் இருக்கும் காய்கறிகள் (colored vegetables) அவர்களை தட்டில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்பார்கள் டயட்டீஷியன்கள். நாம அசால்ட்டாக அதன் முக்கியத்துவத்தை உணராமல் சரி என்று தலையசைத்து வந்து இருப்போம். அப்படி என்ன சத்துக்கள் இருக்கிறது வண்ண வண்ண காய்கறிகளில் ? இதோ பார்ப்போம்.

வண்ணங்கள் நிறைந்த காய்கறிகள் (Colorful vegetables) ஒவ்வொன்றும் நமது உடலுக்குள் இயங்கும் பல்வேறு செயல்களுக்கு தனித்துவமான நன்மைகள் தருகின்றன. ஒவ்வொரு நிறமும் ஒரு தனி ஊட்டச்சத்து, ஆன்டி–ஆக்ஸிடென்ட் அல்லது உடல் பாதுகாப்பின் மூலப்பொருளை குறிக்கிறது என்பதால் தான் பல நிற காய்கறிகளை உணவில் சேர்ப்பது மிக முக்கியம் என்கின்றனர். சரி, எந்த நிறங்கள் கொண்ட காய்கறிகளில் என்ன நன்மைகள் இருக்கிறது பார்ப்போம்.

1. 1. சிவப்பு (Red) நிறக் காய்கறிகள்

Red vegetables
Red vegetables

சிவப்பு (Red) நிற காய்கறிகளான தக்காளி, கேரட் carrot (red), பீட்ரூட் beetroot, சிவப்பு குடைமிளகாய் போன்றவைகளில் காணப்படும் தாவர நிறமிகளான லைகோபீன், அந்தோசயினின்கள் (Lycopene, Anthocyanins) ஆகியவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் ஆரோக்கியத்தில் உதவுகிறது. இருதயம், தோல் மற்றும் கண் ஆரோக்கியம், நினைவாற்றல், புற்றுநோய் தடுப்பு போன்ற நன்மைகளை பெறலாம்.

2. 2. ஆரஞ்சு & மஞ்சள் (Orange/Yellow) நிறக் காய்கறிகள்

Orange vegetables
Orange vegetables

பூசணிக்காய், மஞ்சள் நிற குடைமிளகாய், sweet potato உள்ளிட்டவற்றில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி (Beta-carotene, Vitamin C) நிறைந்துள்ளது. இதனால் கண் பார்வை கூர்மை, சரும, முடி பராமரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை மேம்படுத்தும். குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

3. 3. பச்சை (Green) நிறக் காய்கறிகள்

Green vegetables
Green vegetables

பச்சை (Green) நிறக் காய்கறிகளான பீர்க்கங்காய், பிராக்கோலி, பச்சைப் பட்டாணி, கீரைகள், (broccoli, spinach, green beans, peas) போன்றவற்றில் இரும்புச்சத்து (Iron) Folate, விட்டமின் கே, குளோரோபில் (Chlorophyll) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரித்தல், வலுவான எலும்புகள், மேம்பட்ட மூளையின் செயல்பாடு ஆகியவற்றுடன் உடலிலுள்ள கழிவுகளை நீக்கம் (detox) செய்வது சிறப்பு.

4. 4. ஊதா & நீல (Purple/Blue) நிறக் காய்கறிகள்

Purple vegetables
Purple vegetables

ஊதா & நீல (Purple/Blue) நிறக் காய்கறிகளான கத்திரிக்காய், ஊதா முட்டைகோஸ் (purple cabbage) போன்றவற்றில் அந்தோசயனின்கள் (Anthocyanins) எனும் நிறமிகள் நமது இளமையைத் தக்கவைக்கும். மேலும் நினைவாற்றலை மேம்படுத்தி இதய, மூளை ஆரோக்கியத்தை தருகிறது. அழற்சியை குறைப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக் கால 'இம்யூனிட்டி பூஸ்டர்': உலர் இஞ்சிப் பொடியின் மகத்துவம்!
5 colored vegetables

5. 5. வெள்ளை & பழுப்பு (White/Brown) காய்கறிகள்

White vegetables
White vegetables

உருளைக்கிழங்கு, பூண்டு, வெங்காயம், காளான் (mushroom) , காலிபிளவர் (cauliflower) போன்றவற்றில் உள்ள பொட்டாசியம், அல்லிசின் (Potassium, Allicin) உடலில் நன்மை தரும் பாக்டீரியாவை (good bacteria) ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் உயர்த்தும். மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும்.

என்ன, ஒவ்வொரு நிறமும் ஒரு தனி 'ஊட்டச்சத்து ஆயுதம்' போல செயல்படும் காய்கறிகளை ஒதுக்காமல் ஒரு தட்டில் 4–5 நிறங்கள் இருக்கும் உணவுப் பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைப்பிடித்து நலம் பெறுவோமா?

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com