சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு, அதற்கு Stent வைத்து சிகிச்சை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த பதிவில் Stent சிகிச்சை குறித்த முழு தகவல்களைப் பார்க்கலாம்.
இதயத்தில் இருந்து உடலுக்கு வரும் ரத்தக் குழாய்க்கு ‘Aorta’ என்று பெயர். வயிற்றுப் பகுதிக்கு செல்லும் இந்தக் ரத்தக்குழாயை ‘Abdominal Aorta’ எனச் சொல்வார்கள். ரஜினிகாந்த் அவர்களுக்கு வயிற்றில் உள்ள இந்த ரத்தக் குழாயில்தான் வீக்கம் ஏற்பட்டுள்ளது. வீக்கத்தின் அளவு அதிகரித்தால், அது வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்ப்பதற்காகவே தற்போது ரஜினிகாந்த் அவர்களுக்கு ஸ்டென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்டென்ட் என்றால் என்ன?
ஸ்டென்ட் என்பது ஒரு சிறிய கம்பி வலை போன்ற அமைப்பு கொண்ட ஒரு மருத்துவக் கருவி. இது அடைபட்டுள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்ய உதவுகிறது. இதயத்தில் உள்ள கரோனரி தமனிகள் அடைபடும்போது இதயத்திற்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இதனால், மாரடைப்பு ஏற்படலாம். இந்த அடைப்பை நீக்கி தமனியை விரிவுபடுத்த ஸ்டென்ட் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறு செயல்படுகிறது? - ஸ்டென்ட் பொருத்துவதற்கு முன் முதலில் அடைப்பின் தன்மை மற்றும் அளவு கண்டறியப்படுகிறது. பின்னர், ஒரு சிறிய குழாய் மூலம் ஸ்டென்ட் அடைப்பின் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர், அந்தக் குழாயில் உள்ள சிறிய பலூன் உப்பி, விரிந்து, அடைப்பை நீக்கி, ரத்தக்குழாயை விரிவுபடுத்தும். அதன் பின் பலூன் சுருங்கி ஸ்டென்ட் ரத்தக்குழாயின் சுவரில் ஒட்டிக்கொள்ளும். இது அடைப்பட்ட ரத்தக்குழாயைத் திறந்த நிலையில் வைத்து, ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.
ஸ்டென்ட் பொருத்திய பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளை கட்டுப்படுத்துவது முக்கியம். இதில் உடல் எடை குறைத்தல், உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவு உன்பது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், கொழுப்பு அளவைக் குறைத்தல் மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிடுதல் ஆகியவை அடங்கும்.
சமீபத்திய ஸ்டென்ட் தொழில்நுட்பங்கள்:
உறிஞ்சக்கூடிய ஸ்டென்ட்: இந்த வகை ஸ்டென்ட் காலப்போக்கில் உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், இரத்த நாளங்கள் மீண்டும் அடைபடும் வாய்ப்பு குறைகிறது.
மருந்து பூசப்பட்ட ஸ்டென்ட்: இந்த வகை ஸ்டென்டில் மருந்து பூசப்பட்டிருக்கும். இது இரத்தம் உறைவதை தடுத்து, ஸ்டென்ட் மீண்டும் அடைபடுவதை தடுக்கிறது.
தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டென்ட்: நோயாளியின் இரத்த நாளங்களின் அமைப்புக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டென்ட்கள் தற்போது கிடைக்கின்றன.
Stent சிகிச்சை முறை இதய நோயாளிகளுக்கு ஒரு பெரும் வரமாக அமைந்துள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து இதயத்தை பாதுகாக்க உதவு. இருப்பினும் ஸ்டென் பொருத்துவது ஒரு நிரந்தரத் தீர்வல்ல. அடைப்பு மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.