திடீரென உடலில் தோன்றும் மச்சம்: நல்லதா? கெட்டதா?

மச்சம்
மச்சம்
Published on

டலில் தோன்றும் மச்சங்கள் அனைவருக்கும் அழகானதாகவும், அதிர்ஷ்டமானதாகவும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு முகத்தில் தோன்றும் மச்சங்கள், அழகைக் கொடுக்கும் விதத்திலும், சிலருக்கு விரும்பத்தகாததாகவும் அமைந்து விடுவதுண்டு. உடல் மச்சத்தால் ஒருவர் அழகாகவும் ஆகலாம், அதனால் முகத்தில் சற்று மாற்றங்களும் தோன்றலாம். இதனால் இதைப் பிடிக்காதவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதை உடனே அகற்றி விடுகிறார்கள்.

நம் உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது, ஒருசில இடத்தில் மிக அதிகமாக சுரந்து, அடைப்பை ஏற்படுத்தும்போது அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகின்றன. பிறந்த சில குழந்தைகளுக்கு கால் அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருக்கும். இது அவர்கள் வளர வளர மறைந்துவிடும். கருப்பு தவிர வெள்ளை, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களிலும் மச்சங்கள் காணப்படும்.

ஆரோக்கியம் என்ற அளவில் மச்சங்களினால் பாதிப்புகள் ஏதும் பெரிதாக ஏற்படுவதில்லை. ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ உடனே கவனிக்கவேண்டியது அவசியமாகிறது. ஓரளவுக்கு மேல் மச்சத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரபணு கோளாறாகவோ அல்லது சருமப் புற்றுநோயாகவோகூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் மச்சத்தை சாதாரணமாக நினைத்து விட முடியாது. உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாகும். அதனால் கூட வெளி தோற்றத்தில் மாற்றம் ஏற்படலாம்.

எந்த மச்சம் ஆபத்தில்லை?

மச்சங்கள் கரடு முரடான முனைகள் இல்லாமலும், வழுவழுப்பாகவும், குவிந்த வடிவில் இருந்தாலோ, 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ, அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் மாறாமல் அப்படியே இருந்தாலோ அவை ஆபத்தில்லாத மச்சங்கள்.

ஆபத்தான மச்சம்: மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆபத்தான மச்சங்கள், 'மெலனோமா' என்ற சருமப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதாவது, சருமத்தில் திடீரென மச்சம் போல தோன்றும். ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியிலும், பெண்களுக்கு கால்களின் கீழ்ப்பகுதியிலும் இந்த அறிகுறி தென்படும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சரும மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் மேற்கொள்வது பாதுகாப்பானது. ஆபத்தான மச்சங்கள் என உறுதியானால் மருத்துவர் மூலம் அவற்றுக்கு முறையாக, பாதுகாப்பாக சிகிச்சை மேற்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com