உடல் எடையைக் குறைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை மாற்றம், மன உறுதியின் வெளிப்பாடு. இதை நன்கு புரிந்து கொண்டவர் தாரா டிக்சன் (Tara Dixon) என்ற பெண்மணி. சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட இவர், தனது எடை இழப்பு பயணத்தை Instagram பக்கத்தில் பகிர்ந்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உத்வேகமாக மாறியுள்ளார். அதாவது, ஜிம்முக்கு போகாமலேயே 31 கிலோ உடல் எடையைக் குறைத்து சாதித்துக் காட்டியுள்ளார்.
தொடக்கத்தில் தாரா டிக்சன் எல்லாரையும் போலவே உடல் எடையைக் குறைக்கலாம் என முடிவெடுத்தார். ஆனால் இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதையோ, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதையோ அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர் தனது வாழ்க்கை முறையிலேயே சிறந்த மாற்றங்களைச் செய்தார்.
தாரா டிக்சன் உடல் எடை இழப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் தொடர் முயற்சி மிகவும் முக்கியம் என்கிறார். அவர் தனது பயணத்தின் பல்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, உடல் எடையை குறைப்பது என்பது ஒருநாள் இரவில் நடக்கும் மாற்றம் அல்ல என்பதைக் காட்டியுள்ளார். அவரது கூற்றுப்படி,
தொடர்ச்சியாக முயற்சித்தால் 4 வாரங்களுக்குள் சிறிய மாற்றங்களை உணர முடியும்.
8 வாரங்களில் எடை இழப்பு குறித்த உணர்வு தெளிவாக தெரியும்.
12 வாரங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் தெரியத் தொடங்கும்.
16 வாரங்களில் மற்றவர்கள் கூட இந்த மாற்றத்தை கவனிக்கத் தொடங்குவார்கள்.
20 வாரங்களில் உடல்நிலை இதுவரை இல்லாத அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
24 வாரங்களில் இது ஒரு பழக்கமாக மாறி உங்கள் செயல்பாடு முற்றிலுமாக மாறிவிடும்.
தாரா டிக்சனின் உடல் எடை இழப்பு ரகசியங்கள்:
தாரா டிக்சன் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை. இதற்கு மாறாக தினசரி கலோரி உட்கொள்ளலை 80 சதவீதம் குறைத்துள்ளார். இதன் மூலம் தனக்குப் பிடித்த சாக்லேட்டைக் கூட சாப்பிடலாம். நாளொன்றுக்கு குறைந்தது 10,000 டப்ஸ் நடந்துள்ளார்.
முன்பெல்லாம் எல்லா விஷயங்களுக்கும் காரை பயன்படுத்தியதை நிறுத்திவிட்டு நடக்க தொடங்கியுள்ளார். கார்டியோ மற்றும் வெயிட் ட்ரெயினிங் பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்யத் தொடங்கியுள்ளார். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக முயற்சித்து அதன் மூலம், ஜிம்முக்கு போகாமலே 31 கிலோ உடல் எடை குறைந்துள்ளது.
இந்தப் பெண்ணின் வெற்றிகரமான உடல் எடை இழப்பு ஜிம்முக்கு போகாமல் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் கூட எடை இழக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. உண்மையிலேயே இது அனைவருக்குமான ஒரு சிறந்த உத்வேகம். அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை அணுகினால் வெற்றி நிச்சயம் என்பதை இதன் மூலமாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.