ஆவாரம்பூ பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு பூ வகை. ‘ஆவாரை பூத்திருக்கக் சாவாரை கண்டதுண்டோ’ என்பது ஒரு பழமொழி. அந்தளவிற்கு ஆவாரை யின் பலன்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் கூடியது.
காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி வந்தால் வடுக்கள், எண்ணெய் தன்மை போக்கி மேனியை அழகுறச் செய்யும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, வியர்வையால் ஏற்படும் நாற்றத்தை போக்கக் கூடியது ஆவாரம்பூ.
ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின் குளித்து வந்தால் உடலில் உள்ள துர்நாற்றத்தை போக்குவதோடு, சொறி, சிரங்கு, படை, அரிப்பு போன்றவற்றை நீக்கும்.
எப்பேர்ப்பட்ட காய்ச்சல் வந்தாலும் ஆவாரம் பூக்களைப் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வர காய்ச்சல் குறைவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சிறுநீர் பாதை எரிச்சல், அரிப்பு போன்றவற்றை நீக்கும். ஆவாரம்பூவை சாறாகவோ, கஷாயமாகவோ பருக, சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படாது.
ஆவரம்பூ நீர் தாகத்தைப் போக்குவதோடு, உடல் வறட்சியையும் போக்குகிறது. நீரிழப்பை தடுத்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆவாரம் பூக்களை பச்சையாக மென்று தின்றால் வயிறு மற்றும் குடல்களில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும்.
ஆவாரம்பூ தேநீர் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை பலப்படுத்தும். அதோடு இது மஞ்சள் காமாலை நோயையும் போக்க வல்லது. உடலில் உள்ள புண்களின் மீது ஆவாரம்பூவை அரைத்துப் பூசி வர, சீக்கிரம் ஆறும். இது தொற்றுக்களையும் போக்குகிறது. புஃட் பாய்ஸன் ஏற்படாமலும் பாதுகாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், அடிவயிற்று வலியையும் குறைக்க உதவுகிறது. கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற கண் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்க வைத்து ஆறியதும் அந்த நீரில் கண்களைக் கழுவி வர நல்ல பலனைக் கொடுக்கும்.
மேனி எழிலுக்கும் ஆவாரம்பூ உதவுகிறது. ஆவாரம்பூவை காய வைத்து பவுடராக உபயோகிக்க உடலுக்குக் குளிர்ச்சி தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.