ABC Juice: தப்பி தவறி கூட இவர்கள் இந்த ஜூஸை குடிக்க கூடாது!

ABC Juice
ABC Juice
Published on

நம்மில் பலரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, உடற் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என நினைப்போம். அதற்காக பல விதமான உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றை செய்து உடலை பராமரித்து வருவோம். மேலும் பல விதமான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வருவோம். பழங்களை ஜூஸ் செய்து குடிப்போம். காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வருவோம். இவ்வாறு செய்வதால் நாம் ஆரோக்கியமாக, உடல் பொலிவுடன் இருக்கலாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களை மெருகேற்றுவதற்கு முயற்சித்து வருவார்கள்.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவது இந்த ABC ஜூஸ். இந்த ஜூஸ் குடித்தால் உடல் மெலிந்து, முகப்பொலிவு கிடைக்கும் என அனைவரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஜூஸ் ஒரு சிலர் குடிப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

ABC Juice:

A - ஆப்பிள், B- பீட்ரூட்  C- கேரட் ஆகியவற்றை சமஅளவு எடுத்துக்கொண்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து சுவைக்கேற்ப தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. மேலும் வடிகட்டாமல் குடித்தால் முழு பலனையும் பெற முடியும்.

ABC Juice - யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

ABC Juice உடலுக்கு பலவிதமான நன்மைகள் கொடுத்தாலும், ஒரு சிலர் இந்த ஜூஸ் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பீட்ரூட்டில் ஆக்சலின் உள்ளதால் இது கிட்னியில் கல் உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடும். மேலும் இதில் பீட்டைன் உள்ளதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும். எனவே  சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிக்கலாம். 

மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பீட்ரூட் கலந்த இந்த ஜூஸ் குடிப்பதால் அதிகப்படியான இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் உடலில் தேங்கி உடல் உபாதைகளை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
மாதுளை ஜூஸ் குடிக்கக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?
ABC Juice

டயட் இருப்பவர்கள் இதனை காலை வெறும் வயிற்றில் குடித்து விட்டு, நேரடியாக மதிய உணவு சாப்பிடுவார்கள். இந்நிலையில் லோ-பிரஷர் உள்ளவர்கள் இதனை காலை உணவாக எடுத்துக்கொண்டு, மதிய உணவு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மேலும் லோ-பிரஷர் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான ஜூஸ் என்றாலும், இதனை மட்டும் நாள் முழுவதும் உணவாக பயன்படுத்தக்கூடாது. இது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதி மட்டும் தான்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable bowel syndrome) உள்ளவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம். 

இந்த ஜூஸ் குடிப்பவர்கள் காலை மற்றும் மதியத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் குடிக்கலாம். மேலும் உணவு சாப்பிட்டுவிட்டு இதனை குடித்தால் இதன் பலன் நமக்கு கிடைக்காது. எனவே ஜூஸ் குடிக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.

மேலே குறிப்பிட்டவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் படி நடப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com