பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், எல்லா நேரங்களிலும் பழங்களை சாப்பிடுவது நல்லதா? குறிப்பாக, இரவில் பழங்கள் சாப்பிடுவது நல்லதா? என்பது பலரது கேள்வியாக உள்ளது. இந்தப் பதிவில் இரவில் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள்:
பழங்களில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்கத்தை சீராக்கி, நல்ல தூக்கத்தைத் தூண்டுகிறது. இரவில் செரிமானத்திற்கு உதவும் நல்ல பழங்களை சாப்பிடுவது தூக்கத்தை எளிதாக்குகிறது.
பழங்கள் குறைந்த கலோரி உணவுகள். இரவில் பழங்கள் சாப்பிடுவதால், இரவில் குறைவாக கலோரி உட்கொள்ளப்பட்டு எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், பழங்களில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.
பழங்களில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, முதுமையான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. இவற்றில் கால்சியம், பொட்டாசியம் போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளதால், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் தீமைகள்:
சில பழங்கள் அதிக சர்க்கரை அளவு கொண்டவை. இவற்றை இரவில் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். சிலருக்கு இரவில் பழங்கள் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை இவை ஏற்படுத்தக்கூடும்.
சிலருக்கு பழங்களில் உள்ள பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பழங்களை இரவில் சாப்பிடுவது அலர்ஜியின் தாக்கத்தை அதிகரித்து நிலைமையை மோசமாக்கும்.
சில பழங்களில் உள்ள அமிலங்கள் பற்களின் எனாமலை பாதிக்கும். எனவே இரவில் பழங்கள் சாப்பிட்டுவிட்டு பற்களை துலக்காமல் இருப்பது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இரவில் பழங்களை சாப்பிடுவது நல்லது, கெட்டது என இரண்டையும் உள்ளடக்கியது. இது ஒவ்வொரு நபரின் உடல்நிலை, பழங்களின் வகை, சாப்பிடும் அளவைப் பொறுத்து மாறுபடும். செரிமானத்தை எளிதாக்கும் ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, முந்திரி போன்ற படங்களை இரவில் சாப்பிடலாம். சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் மாங்காய், பலாப்பழம், சப்போட்டா, போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும்.