பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

பலாக் கொட்டை
பலாக் கொட்டைhttps://ta.quora.com

லாக் கொட்டையில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரிபோஃப்ளேவின், தயமின், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

பலாக் கொட்டையில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும், மலச்சிக்கல் பிரச்னை வராமலும் தடுக்கிறது. பலாக் கொட்டைகளில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் ஆரோக்கித்திற்கு இன்றியமையாததாகும்.

பலாக் கொட்டையில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், மாலைக்கண், கண் புரை, மாகுலர் போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. பலா விதையில் உள்ள புரதச் சத்து, தசைகளை வலிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

பலாக் கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது. முகத்தில் ஏற்படும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி முகச் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதையும் படியுங்கள்:
இராமாயண பெருமை பேசும் வால்மீகி பவன் எங்கிருக்கிறது தெரியுமா?
பலாக் கொட்டை

பலா கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ முடி உதிர்வதைத் தடுக்கிறது. இதில் உள்ள  புரதச்சத்து முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இரும்புச் சத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு வழி வகுக்கிறது. மேலும், இந்த விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் முடி உதிர்வுக்கு மற்றொரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலாக் கொட்டையில் நார்ச் சத்து, கரோட்டினாய்டுகள், பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், இதய பிரச்னைகள் வராமலும் பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com