ஆரோக்கிய விஷயத்தில் அற்புதங்கள் செய்யும் ஆரஞ்சு ஜூஸ்!

ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸ்https://www.youtube.com

ரஞ்சு பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது. இதில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சிலருக்கு பால் பிடிக்காது. அத்தகையவர்கள் ஆரஞ்சு சாறு குடிக்கலாம். ஏனெனில் இதில் கால்சியம் அதிகம் உள்ளது.

டைபாய்டு, டி.பி, அம்மை போன்ற நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு திரவ ஆகாரமாக தரப்படுவது ‘ஆரஞ்சு ஜூஸ்’ என்பது நடைமுறை உண்மை. தொண்டையில் ஏற்படும் வறட்சிக்கும், புண்களுக்கும் ஆரஞ்சு ஜூஸ் அசாத்திய சக்தி படைத்த மருந்து. இது தவிர உடலிலுள்ள உப்புச் சத்துகளின் அளவு ஏறு மாறாக இருக்கும் சமயம் ஏற்படும் நச்சுத்தன்மைக்கும் ஆரஞ்சு நல்லது. நச்சுத்தன்மையை பேலன்ஸ் செய்து விடும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ‘டிஸ்பெப்ஸியா’ என்கிற பசியின்மை ஆரஞ்சு சாப்பிட இருந்த இடம் தெரியாமல் போய் விடும். காரணம், ஆரஞ்சு செரிமான சுரப்பிகளை தூண்டும் ஆற்றல் மிக்கது.

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி, உடல் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, மாசுபாட்டால் ஏற்படும் அழுத்தத்தை இது குறைக்கிறது. மேலும், சளி மற்றும் இருமல், ப்ளூ காய்ச்சல் ஏற்படமால் பார்த்துகொள்ளும். ஆரஞ்சு சாற்றில், ‘போலாசின்’ என்ற பொருள் இருக்கிறது. இது செல்களின் வளர்ச்சிக்கும், சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, இதயம் ஆரோக்கியமாக இருக்க மற்றும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதில் ஆன்டி ஆக்ஸிண்ட், நார்சத்து, மினரல்கள், பிளவனாய்ட்ஸ், கரொடிநாய்ட்ஸ் செல்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. ஆரஞ்சை தொடர்ந்து சாப்பிட்டால், நமது சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். வறட்சி ஏற்படாது. இதில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், நமது உடலில் உள்ள நீரின் அளவை சீராக வைத்திருக்கும்.இதில் உள்ள நார்சத்து, நமது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

கரோட்டினிலிருந்து ரெட்டினாயிக் என்ற அமிலத்தை நம் உடலால் தயாரித்து கொள்ள முடியும். இந்த அமிலம் உடலில் போதுமான அளவு இருந்தால் எங்கெங்கே உடல் செல்களில் புற்றுநோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் உண்டோ ஆங்காங்கே இந்த அமிலம் பரவி செல்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றி விடுகின்றன. இந்த ரெட்டினாயிக் அமிலம் ஆரஞ்சுப் பழத்தில் தாராளமாக உள்ளது என்கிறார்கள் கார்னெல் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

‘கரோனரி இஸ்லேமியா’ என்கிற இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் பாதைகளில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகளை ஆரஞ்சு ஜூஸ் சரிசெய்யும். இண்டர்பெரான் எனும் வைட்டமின் சியை ஒருமுகப்படுத்தும் ரசாயனம் ஆரஞ்சு பழத்தில் உள்ளது. இது காற்று, நீர் மூலம் பரவும் நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் மிக்கது. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து இருக்கும் பல் அமைப்பை சீர் செய்வதில் ஆரஞ்சு பங்கு வகிக்கிறது.

ஆரஞ்சு பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்படுவது மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் எனும் அமிலமாகும். உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பினை கரைத்து வெளியேற்ற பெரிதும் இது பயன்படுகிறது. இரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இது இதயப் பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
Fatty Liver: இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் ஜாக்கிரதை!
ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தில் உள்ள, ‘நோபிடிலின்’ எனும் மூலக்கூறு உடல் பருமனை குறைக்கும் என்பதை கனடாவில் உள்ள ஆஸ்பிரின் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அத்துடன் இதய ஆரோக்கியம் காத்து நீண்ட ஆயுளுடன் வாழவும் உதவுகிறது என்கிறார்கள்.

வாய்ப்புண் உள்ளவர்கள் ஆரஞ்சு சுளைகளை வெகு நேரம் வரை வாயில் போட்டு மென்று விழுங்கினால் வாய்ப்புண் ஆறும். வாய் நாற்றம் அகலும். ஆரஞ்சு ஜூஸில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட இரவில் நல்ல தூக்கம் வரும். ஒரு பஞ்சில் ஆரஞ்சு சாற்றை எடுத்து பற்களிலுள்ள கறைகளில் தேய்த்து வர கறை நீங்கி பற்கள் பளிச்சென்று இருக்கும். ஆரஞ்சு தோலை நீர் சேர்த்து ‘மை’யாக அரைத்து களிம்பு போல் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முகப் பகுதியில் தடவி வர பருக்கள் இல்லாமல் போய் விடும். அதேபோல் பாலுடன் ஆரஞ்சு பொடியை கலந்து பூசி வர முகம் பொலிவு பெறும்.

காலை 11 மணி அல்லது மாலை 4 மணி இந்த பழத்தை சாப்பிட சிறந்த நேரம். இதேபோல், இதை அதிகமாக சாப்பிட்டால், ஜீரண பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் இதை தவிர்க்கலாம். மேலும், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 10 அவுன்ஸ்க்கு மேல் ஆரஞ்சு சாற்றைக் குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com