பசித்துப் புசி: முன்னோர்களின் குடல் ஆரோக்கியம்!

Gut health
Gut health

நமது முன்னோர்கள் இயற்கை உணவுகளைப் பயன்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினர். அவர்கள் 'பசித்துப் புசி' என்ற முதுமொழியினைப் பின்பற்றி, உணவை மருந்தாக மாற்றி, நோய்களை தவிர்த்து, நீண்ட ஆயுளை அடைந்தனர்.

இந்தக் கட்டுரை, மஞ்சள், சீரகம், இஞ்சி, நெல்லிக்காய், நுங்கு, பனங்கற்கண்டு ஆகிய ஆறு சூப்பர் ஃபுட்ஸ்களைப் பற்றி விளக்குகிறது. இவை எப்படி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தின, எந்த பிரச்சினைகளை தவிர்த்தன என்பதை தெளிவாகப் பார்க்கலாம்.

முன்னோர்களின் குடல்நலக் கலை:

1. மஞ்சள் (Turmeric):

Turmeric
Turmeric

மஞ்சளில் உள்ள கர்குமின், குடல் அழற்சியை குறைக்கிறது. முன்னோர்கள் இதைச் சமையலில் சேர்த்து, குடல் ஆரோக்கியத்தைப் பேணினர். இது வயிற்றுக் கோளாறுகள் மற்றும் உடல் சூடு சார்ந்த பிரச்னைகளைத் தவிர்த்தது.

2. சீரகம் (Cumin):

Cumin
Cumin

இதில் உள்ள கார்மினேட்டிவ் தன்மை செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை சீராக்கியது. அவர்கள் இதைத் தண்ணீரில் ஊற்றிக் குடித்து, வயிற்று வீக்கம், மற்றும் அஜீரணத்தை கட்டுப்படுத்தினர்.

3. இஞ்சி (Ginger):

Ginger
Ginger

இஞ்சியில் உள்ள 'ஜிஞ்சரால்' தன்மை, குடல் பிரச்னைகளை குறைத்து, வாந்தியை போக்கி மற்றும் உணவு செரிமானத்தை எளிதாக்கியது. முன்னோர்கள் இஞ்சித் துவையலை உணவுடன் சேர்த்து, அஜீரணம் வராமல் குடல் நலத்தைப் பாதுகாத்தனர்.

4. நெல்லிக்காய் (Amla):

Amla
Amla

நெல்லிக்காய், இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குடல் சமநிலையை பேணியது. அவர்கள் இதைப் பழமாகவோ அல்லது உலர்த்தி பொடியாகவோ சாப்பிட்டு, குடல் புண் மற்றும் அமிலப் பிரச்சனைகளைத் தவிர்த்தனர்.

5. நுங்கு (Palm Fruit):

Nungu
Nungu

நுங்கு - இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குளிர்ச்சியை தந்து, குடல் ஈரப்பதத்தை பராமரித்தது. முன்னோர்கள் இதை நேரடியாக உண்டு, வெப்பத்தால் ஏற்படும் குடல் அசௌகரியத்தை தவிர்த்தனர்.

6. பனங்கற்கண்டு (Palm Jaggery)

Palm Jaggery
Palm Jaggery

பனங்கற்கண்டு, நார்ச்சத்து நிறைந்தது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை தவிர்க்க உதவியது. அவர்கள் இதை பாலுடன் சேர்த்து சாப்பிட்டனர்.

முன்னோர்களின் உணவு பழக்கம்:

முன்னோர்கள் "பசித்துப் புசி" என்ற முதுமொழியை உயர்வாக மதித்தனர். காலை, மதியம், மாலை என்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உண்டு, அளவோடு சாப்பிட்டனர். உணவை நன்கு மென்று சுவைத்து சாப்பிடுவது அவர்களது பழக்கம். இது குடல் ஆரோக்கியத்தை பேணி, நோய்களைத் தவிர்க்க உதவியது. இயற்கை உணவுகளை மதித்து வாழ்ந்தனர்.

குடல் நலத்தை மேம்படுத்துவோம்:

முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள் நமக்கு ஒரு பாடம். மஞ்சள், சீரகம், இஞ்சி, நெல்லிக்காய், நுங்கு, பனங்கற்கண்டு போன்ற உணவுகள் குடல் நலத்தை மேம்படுத்தி, நோய்களை தவிர்த்தன. காலத்தின் அமைதியில், இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்த முன்னோர்கள் - அவர்களது உணவு ஒரு புனித பயணமாக இருந்தது! இன்று, விரைவு உணவுகளால் நிரம்பிய இந்த அவசர உலகில், அவர்களது ஞானம் ஒரு புதிய வெளிச்சமாக தோன்றுகிறது.

பசித்துப் புசி என்ற முதுமொழியை மதித்து, அவர்கள் நேரம் காத்து, அளவோடு உண்டு, உடல் நலத்தை பாதுகாத்தனர். இது ஒரு கலை, ஒரு வாழ்வியல்! என்ன, சரிதானே மக்களே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com