ஆப்பிள் சிடார் வினீகர் - வெள்ளை வினீகர் இரண்டில் எது சிறந்தது?

Apple cider vinegar vs White vinegar
Apple cider vinegar vs White vinegar
Updated on

உடலின் பிஹெச் அளவை சமச்சீராக வைக்க இரண்டு வகை வினீகருமே நல்லதுதான். சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய இரண்டுமே உதவினாலும் எந்த மாதிரியான சருமத்திற்கு எது ஏற்றது என்பதைப் பார்ப்போம்.

ஆப்பிள் சிடார் வினீகர்:

ஆப்பிளை புளிக்கவைத்து தயாரிக்கப்படுகிறது‌. இதில் அசிட்டிக் அமிலம், மினரல்கள் மற்றும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் பிஹெச் அளவு 2.5 முதல் 3.5 வரை வைக்கப்படுகின்றன. இது புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவதால் இதில் உள்ள மாலிக் அமிலம் மற்றும் இயற்கையான என்சைம்கள் சுரக்கப்பட்டு உடலை எக்ஸ்ஃபோலியேட் செய்து சருமத்தை பளபளக்க வைக்கிறது.

வெள்ளை வினீகர்:

இது குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. இதன் அமிலத்தன்மை சருமத்தை சுத்தம் செய்கிறது. இதன் அமிலம் சருமத்தின் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்கி பளபளப்பாக்குகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்றது. கரும் புள்ளிகள் மற்றும் முகத்துவாரங்களை நீக்குவதில் உதவியாக இருக்கிறது. ஆப்பிள் சிடார் வினீகரில் உள்ள மாலிக் அமிலம் இதில் கிடையாது. ஆனால் இதன் அசிட்டிக் அமிலம் எக்ஸ்ஃபோலியேட் செய்வதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

ஆனால் இதை அதிக அளவு எக்ஸ்ஃபோலியேஷனுக்கு பயன்படுத்தக் கூடாது. இதன் அமிலத் தன்மையால் எரிச்சல் உணர்வு ஏற்படுவதால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

எது சிறந்தது?

எல்லாவிதமான சருமங்களுக்கும் பொதுவாக ஏற்றதாக ஆப்பிள் சிடார் வினீகர் கருதப்படுகிறது. ஆப்பிள் சிடார் வினீகர் ஒருபங்கு என்றால் மூன்று பங்கு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். ஆப்பிள் சிடார் வினீகரில் குறைந்த அமிலம் மற்றும் நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சருமத்தில் வெள்ளை வினீகரைப் போன்று அரிப்பை ஏற்படுத்தாது. இதனால் வறண்ட சென்சிடிவ் சருமம் மற்றும் பருக்கள் ப்ரச்னைகள் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள மாலிக் அமிலம் சருமத்தை பளபளக்கச் செய்து புத்துணர்வோடு ஆரோக்கியமாக வைப்பதால் சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. வெள்ளை வினீகரில் குறைந்த ஊட்டச்சத்து உள்ளதால் வறண்ட சருமம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரச மரம்: இவ்வளவு மருத்துவ குணங்களா?
Apple cider vinegar vs White vinegar
logo
Kalki Online
kalkionline.com