குழந்தைகளிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மலேரியா! பெற்றோரே கவனியுங்கள்!

ஏப்ரல் 25: உலக மலேரியா தினம்
World Malaria Day
World Malaria Day
Published on

மலேரியா ஒரு உலகளாவிய பிரச்சனை. சமீபத்திய ஆண்டுகளில் உலகில் குறைந்தது 87 நாடுகளில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். சரியாக சிகிச்சை அளிக்கப்படாத மக்கள் இறப்பை சந்திக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக மலேரியா தினத்தில் மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த நோயிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது பிளாஸ்மோடியம் இனத்தைச் சேர்ந்த ஒட்டுண்ணிகளால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதால் மலேரியா பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டால் இது தடுக்கக் கூடியது மற்றும் குணப்படுத்தக் கூடியதாகும்.

மலேரியா எவ்வாறு பரவுகிறது?

மலேரியா ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாக பரவுவதில்லை.

கொசுக்களால் மலேரியா மட்டுமல்ல சிக்கன்குனியா, டெங்கு போன்ற பல நோய்களும் பரவுகின்றன. மலேரியா என்பது சில வகையான கொசுக்களால் மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான நோய். மலேரியாத் தொற்று பாதிக்கப்பட்ட பெண் கொசு மனிதர்களை கடிப்பதால் மலேரியா ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் ரத்த மாற்றம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தாயிடமிருந்து கருவில் குழந்தைக்கு நோய் பரவுதல், மாசுபட்ட ஊசிகள் போன்றவற்றின் மூலம் மலேரியா பரவக் கூடும்.

யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும்?

கைக்குழந்தைகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுமிகள், அடிக்கடி பயணம் செய்வோர், எச்.ஐ. வி அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய் தொற்றுக்கான ஆபத்தில் உள்ளனர்.

குழந்தைகளிடையே மலேரியா மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி இறப்பையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்குக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் மலேரியா உள்ளது.

பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் முதலில் கல்லீரலை பாதித்து பின்பு ரத்த ஓட்டத்தில் நுழைந்து ரத்த சிவப்பணுக்களை பாதித்து அழிக்கின்றன.

மலேரியாவின் பொதுவான ஆரம்ப அறிகுறிகள்

மலேரியாவின் பொதுவான ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி மற்றும் குளிர். பொதுவாக, பாதிக்கப்பட்ட கொசு கடித்த பத்திலிருந்து 15 நாட்களுக்குள் அறிகுறிகள் உடலில் தோன்றக்கூடும்.

தீவிரமான அறிகுறிகள்

பலவீனமான உணர்வு, உடலில் மிகுந்த சோர்வு, வலிப்பு, சுவாசிப்பதில் சிரமம், கருமையான அல்லது ரத்தம் கலந்த சிறுநீர், மஞ்சள் காமாலை, போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். லேசான மலேரியாவை ஆரம்பத்திலேயே சிகிச்சை மூலம் தீவிரமாவதை தவிர்க்கலாம்.

தடுக்கும் முறைகள்

கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் முதல் முதலில் செய்யவேண்டிய தடுப்பு முறை. மலேரியா தாக்குவதன் அபாயத்தை குறைக்கும்.

கொசுவலைகளைப் பயன்படுத்துவது, மாலை வேலைகளில் கதவு ஜன்னலை சாத்தி வைப்பது, குழந்தைகளுக்கு கைகள் கால்களை மூடிய உடைகளை அணிவிப்பது, கொசு கடிக்காமல் இருக்க லிக்விட் அல்லது உடலில் கொசு எதிர்ப்பு கிரிம்களை தடவிக் கொள்ளலாம். மின்விசிறியை முழுவேகத்தில் சுழல விட்டு உறங்க வேண்டும்.

மலேரியா பாதித்த பகுதிகளுக்கு செல்லும்போது தடுப்பு மலேரியா எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம். வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com