இரசாயனக் கழிவுகளே இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமா?

Are chemical wastes the cause of blood cancer?
Are chemical wastes the cause of blood cancer?https://www.cancerhealercenter.com

ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ஒரு வகை நோயையே இரத்தப் புற்றுநோய் என்று கூறுவர். இது உடலில் இரத்த அணுக்கள் செயல்படும் முறையைப் பாதிக்கிறது. இரத்தப் புற்றுநோய் என்பது மூன்று வகைப்படும். அவை லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா. இது நம்முடைய உடலில் இரத்த அணுக்களின் இயல்பான உற்பத்தி அளவு மற்றும் ஆரோக்கியமான செயல்பாட்டை சீர்குலைக்கிறது. அது மட்டுமின்றி, இது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய்களுள் ஒன்றாகவும் உள்ளது.

இந்நோய்க்கான அறிகுறிகள்: இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகளைப் பொறுத்தவரையில். அது ஒவ்வொருவருக்கும் அவரவர் நோயின் தன்மைக்கேற்ப வேறுபடலாம். ஆனால், இரத்தப் புற்றுநோய் இருப்பதைக் குறிக்கும் ஒருசில பொதுவான அறிகுறிகள் இருக்கின்றன. அவை: அதிகளவிலான உடல் சோர்வு அல்லது பலவீனம், திடீர் உடல் எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல், இரவு நேரங்களில் அதிகமான வியர்வை, ரத்த சோகை, இரத்தப் போக்கு, மூட்டுகள் அல்லது எலும்புகளில் வலி ஆகியவை இரத்தப் புற்றுநோய்க்கான ஒருசில அடிப்படை அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் உங்கள் உடலில் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

தலைமுறை கடந்து இரத்தப் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?: நிச்சயமாக. ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ கூட இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இரசாயனப் பயன்பாடு இரத்தப் புற்றுநோய்க்கு காரணமா?: பல இரசாயனங்களின் வெளிப்பாடுகூட இரத்த புற்றுநோய்க்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். அதாவது, பென்சீன், சிகரெட், பெட்ரோல் மற்றும் எண்ணெய் போன்ற இரசாயன தொழில்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சவர்க்காரம், துப்புரவுப் பொருட்கள், பசை, பெயிண்ட் ஸ்ட்ரிப்பர் மற்றும் கலைப் பொருட்களின் அதிகளவிலான பயன்பாடும்கூட இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம்.

இரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்: இரத்தப் புற்றுநோயை முற்றிலுமாகத் தடுப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். ஆனால், மக்கள் இரத்தப் புற்றுநோய்க்கான ஆபத்தைக் குறைக்கவும் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான சில வழிமுறைகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆல்ஃபா ஆணின் 6 விசேஷ திறன்கள் தெரியுமா?
Are chemical wastes the cause of blood cancer?

* சீரான உணவை உட்கொள்வது, வழக்கமான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆகியவை இரத்த புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும்.· ‘ஹெபடைட்டிஸ் பி’ மற்றும் ‘மனித பாப்பிலோமா வைரஸ் (HPV)’ போன்ற நாள்பட்ட நோய் தொற்றுகள் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதுபோன்ற தொற்றுநோய்களுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நோய்க்கான தாக்கத்தைக் குறைக்க உதவும்.

* வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் இரத்த புற்றுநோய் மற்றும் பிற சுகாதார நிலைகளின் ஆரம்ப அறிகுறிகளை நம்மால் கண்டறிய முடியும். ஆரம்பகால நோய் கண்டறிதல், காலதாமதமின்றி உடனுக்குடன் மருத்துவரை அணுகுதல் மற்றும் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ளுதல் ஒருவரை புற்றுநோயிலிருந்து எளிதில் குணமடைய வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com