குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

Is it necessary to powder babies?
Is it necessary to powder babies?
Published on

குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை டயபர் மாற்றும்போதும், குளிப்பாட்டிய பிறகும் தாய்மார்கள் அளவுக்கு அதிகமாக பவுடர் பூசுவதைப் பார்த்திருப்போம். இப்படி குழந்தைகளின் சருமத்தில் அதிகமாக பவுடர் போடுவது அவசியம்தானா? இதைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

குழந்தைகள் எந்நேரமும் புத்துணர்ச்சியாகவும், வாசமாகவும் இருக்க வேண்டும் என்று தாய்மார்கள் அதிகமாக பவுடரை அள்ளிப் பூசுவதைப் பார்த்திருப்போம்.  ஆனால், குழந்தைகளுக்கு பவுடர் என்பது தேவையேயில்லாத ஒன்றாகும். இது நுரையீரலுக்குள் சென்று குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொல்லப்படுகிறது.

டால்கம் பவுடரில் உள்ள 'டால்க்' என்னும் கனிம கலவைதான் பவுடர் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இது இயற்கையாக ஆஸ்பெஸ்டாஸ் என்னும் பொருளை உள்ளடக்கியுள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. இதை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்று புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், குழந்தைகளுக்கு தாய்மார்கள் பவுடர் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு பவுடர் வாங்கிப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவர்கள் சொல்லும் தரமான பவுடரை வாங்குவது சிறந்தது. ஒவ்வாமை குறைவாக இருக்கும் பவுடரை பார்த்து வாங்க வேண்டும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு பவுடர் பூசும்போது நேரடியாக முகத்தில் அடிக்க வேண்டாம். முதலில் துணியில் பவுடரை போட்டு அதை குழந்தைகளுக்குப் பயன்படுத்தவும். கண், வாய், மூக்கு போன்ற இடங்களுக்கு பவுடர் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். குழந்தைகளை குளிப்பாட்டியதும் ஈரத்துடன் பவுடர் பூச வேண்டாம். குழந்தைகள் சருமத்தில் உள்ள ஈரம் நன்றாக உலர்ந்த பிறகு பவுடர் போடுவது நல்லதாகும்.

இதையும் படியுங்கள்:
பனங்கிழங்கு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Is it necessary to powder babies?

டயபர் மாற்றும்போது குழந்தைகளுக்கு பவுடரை அள்ளிப் பூசுவதை பார்த்திருப்போம். ஆனால், குழந்தைகளின் அந்தரங்க பகுதியில் பவுடர் படக்கூடாது. குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்துவிட்டால், வெதுவெதுப்பான நீரைக் கொண்டு மெல்லிய துணியால் துடைத்துவிட்டு மாற்ற வேண்டும். பவுடர் ஏற்கெனவே போட்டிருந்தால் துடைத்துவிட்டு பிறகு சிறிது பவுடர் போடுவது நல்லது.

குழந்தைகளுக்கு பவுடர் பயன்படுத்தும்போது அளவாகப் பயன்படுத்த வேண்டும். கழுத்து, கை, கால்கள், தொடைப் பகுதியில் பயன்படுத்தலாம். கண்டிப்பாக அந்தரங்கப் பகுதியில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இந்தக் குறிப்புகளை கடைப்பிடித்து குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com