வெயிட் லாசுக்கு உதவும் வெண்ணெய் பழம்!

Avocado helps in weight loss.
Avocado helps in weight loss.

‘வெண்ணெய் பழம்’ எனப்படும் அவகடோ நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த பழத்தை பயன்படுத்தி நமது சருமத்தை அழகாக மாற்றலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குக் தெரியும்? அதேசமயம் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

இந்த பழத்தில் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்புகள், புரதம், விட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள் இந்த பழத்தை உட்கொண்டால் விரைவில் தீர்வு கிடைக்கும். சமீபத்தில் மூட்டு வலி சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவகடோ பழத்தில் உள்ள சத்துக்கள் மூட்டு வலியையும், எலும்பு பிரச்னைகளையும் சரி செய்யும் எனக் கண்டறிந்துள்ளனர்.

இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த வெண்ணெய் பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். இது நம் செரிமான பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்யக்கூடிய பழமாகும். மேலும் இது சிறுநீரக பிரச்னைகளைத் தடுத்து, கண் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. அவகடோ புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் பழமாக திகழ்கிறது.

இந்த பழத்தில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளதால் நமது சருமத்தை பொலிவடையச் செய்யும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி எப்போதும் இளமை தோற்றத்தைக் கொண்டிருக்க உதவுகிறது. இதன் காரணமாகவே பல அழகு சாதனப் பொருட்களில் மூலப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.

அவகடோ மற்றும் பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால், சருமம் பளிச்சென்று பிரகாசமாக மாறி கரும்புள்ளிகள் நீங்கிவிடும். அல்லது இந்த பழத்தை மசித்து பால் சேர்த்தும் முகத்தில் பயன்படுத்தலாம். அவகடோ பழம் கிடைக்காதவர்கள் கடைகளில் அவகடோ எண்ணெய் என்றே விற்பனை செய்கிறார்கள். அதையும் சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com