

மூலிகைகளால் நம் உடம்புக்கு பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கின்றன. நீர் வளம் நிறைந்த இடங்களிலும் வயல் வரப்புகளிலும் நீர்முள்ளி (Neermulli) வளரும். இது குத்துச் செடி வகையை சேர்ந்தது. இதன் விதைகள் அடர்ந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால் பசை போன்று ஆகும். இது ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும்.
உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு. இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்து இருக்கின்றன.
1. உடல் சூடு குறைய.
நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது உடல் சூட்டால் உண்டாகக்கூடிய மேக நோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரகத் தொற்று நோய்கள், சிறுநீரக கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு உள்ளது.
2. ரத்த சோகை நீங்க
ரத்த சோகை ஏற்படும் போது உடல் வீக்கம் அதிக சோர்வு , மேல் மூச்சு வாங்குதல், இளைப்பு ஏற்படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து நூறு மில்லி வீதம் தினம் காலை மாலை குடித்து வந்தால் வீக்கம் குறைந்து உடல் ரத்த அணுக்கள் அதிகரிக்கும்.
3. உடல் பலம் அடையும்
நீர் முள்ளி ரத்தசோகையைப் போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் வாதத்தன்மை தோன்றும் போது மூட்டு வலி அதிகரிக்கும். இந்த வலியைப் போக்கி மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது உடல் உள் உறுப்புகளையும், வீக்கங்களையும் போக்கும்.
4. சர்க்கரை அளவு கட்டுக்குள் வர
சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும் ,தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டும் இன்றி அதன் வேரும் ,இலையும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாக உள்ளது. நீர் முள்ளி குடிநீர் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
5. நோய் தொற்றுகளில் இருந்து விடுபட
நீர்முள்ளி(Neermulli) மூலிகையின் இலை மற்றும் வேரிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மூலப்பொருளில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இது பருவ காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுகளில் இருந்தும் நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பாதுகாப்புகளிலிருந்து விடுபடவும் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாக பரிந்துரை செய்யப்படுகிறது.
தொகுப்பு: நீர்முள்ளி பயன்கள் ஆயுர்வேத நூலிலிருந்து
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)