Belly fat
ஆரோக்கியம்
தொப்பை கொழுப்பு - Chapter - 1: தொப்பை ஏன் வருது? நம்ம பண்ற தப்பும், ஹார்மோன் ரகசியமும்!
இன்றைய காலகட்டத்தில், பள்ளிக்கூடம் போகும் மாணவர்கள் முதல், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை 'தொப்பை' (Belly Fat). 'நம்மால் அழகாக சட்டை போட முடியவில்லை' என்ற ஒரு அழகியல் பிரச்னையாக மட்டும் பலர் இதைப் பார்க்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தொப்பை என்பது, நமது ஆரோக்கியத்தின் முதல் எதிரி. இது பல கொடிய நோய்களுக்கான காரணமாக அமைகிறது.
பொதுவாக 'தொப்பை' என்று நாம் சாதாரணமாகச் சொன்னாலும், அதில் இரண்டு வகைகள் இருக்கின்றன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரிந்தால்தான், எது ஆபத்தானது என்று நமக்குத் தெளிவாகப் புரியும்.
