தமிழர்களின் பாரம்பரியத்தில் வெற்றிலை பாக்குக்கு தனி இடம் உண்டு. பழங்காலத்தில் அனைவரும் அடிக்கடி வெற்றிலை மெல்வார்கள். ஆனால் இந்த நடைமுறை காலப்போக்கில் குறைந்து விட்டது.
இன்றைய காலத்து நபர்கள் பலருக்கும் வெற்றிலை பற்றி தெரிந்திருக்காது. திருமண வீடுகளில் கிடைக்கும் பீடாவை தான் சாப்பிட்டு இருப்பார்கள். அதனால் வெற்றிலை குறித்த நன்மைகள் அதிகளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருமண பத்திரிக்கை, நிச்சயதார்த்தம், காதுகுத்து என அனைத்து விஷேசங்களிலும் வெற்றிலை பாக்கு இருக்கும். ஆனால் அந்த வெற்றிலை பாக்கு பெரும்பாலான வீடுகளில் குப்பைகளுக்கே செல்லும்.
இதன் நன்மைகளை அறிந்தால் யாரும் இனி அதை வீணாக்கமாட்டார்கள். வெற்றிலையை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யும். சாப்பிட பிடிக்காதவர்கள் இதனை பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவினால், முகப்பரு நீங்கும்.
மேலும் வெற்றிலையை கொதிக்க வைத்து அந்த நீரால் முகம் கழுவி வர முகப்பருவை தடுக்க முடியும். அந்த நீரை தலையில் ஊற்றி ஊற விட முடி உதிர்வு பிரச்சனையும் குறையும்.
இந்த வெற்றிலை கொதித்த வைத்த நீரில் குளித்து வந்தால் தோல் அரிப்பு பிரச்சனை சரியாகும். உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும் என நினைப்பவர்களுக்கும் இந்த வெற்றிலை தண்ணீர் உதவும். உடலில் உள்ள கெட்ட செல்களை நீக்கி, நறுமணத்தை அளிக்கும்.
தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என சொல்லப்படுகிறது. மேலும் வெற்றிலையை வாயில் இட்டு மெல்வதால் வாய் துர்நாற்றமும் நீங்கும். இதனாலேயே பாட்டிகள் அடிக்கடி வெத்தலை இடித்து மென்று வந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.