கிராம்பு பால் குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

Clove Milk benefits
Clove Milk
Published on

கிராம்பில் ஏராளமான நன்மைகள் கொட்டி கிடப்பது நாம் அறிந்ததே. அந்தவகையில் கிராம்பு பாலின் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

கிராம்பு சற்றுக் காரம் என்றாலும், அதில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக பல் பிரச்னைகள் உள்ளவர்கள் கிராம்பை எடுத்துக்கொண்டால், பற்கள் ஆரோக்கியமாகும். கிராம்பு ஆயுர்வேதத்திலும் மருத்துவத்திலும் முக்கிய பொருளாக கருதப்படுகிறது.  சிலர் அதனை தனியாக சாப்பிடமாட்டார்கள். அவர்கள் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது பால், தேன் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். அந்தவகையில் கிராம்பு பாலின் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

1.  நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தல்: பொதுவாக கிராம்பில் வைட்டமின் சி உள்ளதால், இது உடலில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. மேலும் கிராம்பு பாலில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன.
இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கச் செய்து நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

2.  உடல் வலியை போக்கும்: கிராம்பு பாலில் உள்ள ஆன்டி இன்ஃபளமேட்டரி உடல் வலியை குறைப்பதோடு தசைகளையும் வலிமையாக்கும்.

3.  ஆண்மை குறைப்பாட்டிற்கு: National Institute of health வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி கிராம்பில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் ஆண்களின் மனநிலையை மேம்படுத்துகிறது. அத்தோடு ஆண்மைக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்கிறது.

4.   நுரையீரல் பலப்படுத்தும்: நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். ரத்தத்தில் ஆக்ஸிஜனை முழுமையாக கடத்துகிறது. இதிலுள்ள பண்புகள் சுவாச மண்டலம் தொடர்பான எல்லாவித பிரச்சினைகளையும் இது சரிசெய்து விடும்.

5.  ஜீரண சக்தியை அதிகரிக்கும்: கிராம்பில் உள்ள கார்மினேட்டிவ் பண்புகள், குடல் இயக்கத்தை மேம்படுத்தி, ஜீரணத்தை தூண்டும் என்சைம்களின் உற்பத்தியை தூண்டுகிறது. ஜீரண ஆற்றல் அதிகரிக்கும். இதனால், அஜீரணக் கோளாறு, வாய்வுத் தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படுகிறது.

கிராம்பு பால் செய்யும் வழிமுறைகள்:

தேவையான பொருட்கள்:

1.  கிராம்பு – 3 முதல் 4 கிராம்புகளின் பொடி

2.  பால் – 1 கப்

3.  தேன் – அரை ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
காய்கறிகளை இப்படி சமைத்தால்தான் முழு சத்துக்களும் கிடைக்கும்! 
Clove Milk benefits

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். காய்ந்ததும் கிராம்பு பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள். 2 நிமிடம் கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் குடித்து வரலாம்.

தினமும் இரவு கிராம்பு பாலை குடித்து வந்தால், மேற்சொன்ன நன்மைகள் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com