இந்திய சமையலில் ஒரு பிரபலமான மூலிகையாக விளங்கும் கொத்தமல்லி அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக மட்டுமின்றி மருத்துவ குணங்களுக்கும் பெயர் பெற்றது. கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இந்தப் பதிவில் கொத்தமல்லி சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
கொத்தமல்லி சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்:
கொத்தமல்லி சாறு செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக இருக்கும்.
கொத்தமல்லி சாறு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
கொத்தமல்லி சாற்றில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. இதனால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக இது போராட உதவுகிறது.
கொத்தமல்லி சாறு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நீரிழிவு நோயாளிகள் தினசரி கொத்தமல்லி சாறு குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.
கொத்தமல்லி சாறு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவும் அமைதியாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது தூக்கமின்மைக்கு சிகிச்சை அளித்து, பல்வேறு விதமான உடல்நல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கொத்தமல்லி சாற்றில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் செல்களை வளர்ச்சியில் இருந்து தடுக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு குடிப்பதால் அதிலிருந்து விடுபடலாம்.
கொத்தமல்லி சாறு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், அல்சைமர் நோய் மற்றும் பிறர் நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
தொடர்ச்சியாக கொத்தமல்லி சாறு குடிப்பதால் சிறுநீரகக் கற்கள் கரைந்து, சிறுநீர்ப் பாதை தோற்றுகள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.
இப்படி கொத்தமல்லி சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தினசரி ஒரு டம்ளர் (250ml) கொத்தமல்லி சாறு குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்தமல்லி சாறு குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.