தக்காளியை நாம் தினசரி உணவுகளில் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் தக்காளியை வேக வைத்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் தக்காளியை வேக வைக்காமல் அப்படியே பழச்சாறு செய்து சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக தக்காளி பழச்சாற்றில் வலியை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
தக்காளியை தண்ணீரில் கரைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் ஏற்படும் கிருமி தொற்றுகள் நீங்கும். தக்காளியை நன்றாக பிழிந்து தோல் மற்றும் விதையை நீக்கி பருகுவதாலும், நன்றாக பழுத்த தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு தருவதாலும் உடல் உஷ்ணம் குறையும்.
தக்காளி சாறு குடிக்கும்போது எப்போதும் அதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி விடுவது நல்லது. ஏனென்றால் அதன் தோல் மற்றும் விதைகளில் யூரிக் மற்றும் பாஸ்பரஸ் அமிலம் உள்ளது. இதனால் கிட்னியில் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் உடல் உஷ்ணத்தைத் தணிக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம். மேலும் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் புரோஸ்டேட் கேன்சர் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெயில் காலங்களில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கு தக்காளி சாற்றை முகத்தில் பூசினால் சருமம் மென்மையாவதுடன் குளிர்ச்சியையும் உண்டாக்கும். புகைப்பிடிப்பவர்கள் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் புகை பிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். தக்காளியில் சிகரெட் பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் அமிலங்கள் உள்ளது.
ஹீரோ லைகோபின் எனப்படும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சத்து தக்காளியில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்களும் இதய ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவுகிறது. நமது உடலில் இதயம் மிக முக்கியமான பாகம் ஆகும். தக்காளியில் உள்ள லைகோபின் இதயத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். தக்காளி ஜூஸ் குடிப்பதால் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு இதயத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.