நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தையும் பார்த்துப்பார்த்து செய்ய வேண்டிய கட்டாய உலகில் வாழ்ந்து வருகிறோம். சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும், இதில் வைட்டமின்கள் உள்ளதா? தாதுக்கள் நிறைத்திருக்கிறதா? என ஆராயவேண்டி உள்ளது. இவை அனைத்துமே ஆரோக்கியத்தை பெறவும், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும்தான் ...எவ்வளவு காசு சம்பாதித்தாலும், 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இல்லையா நண்பர்களே!
அவ்வாறு நாம் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று தண்ணீர். 'நீரின்றி அமையாது உலகு'. இத்தகைய நீர் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தேவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த நீரை எப்போது அருந்தினால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?
உடனே நீங்கள் நினைக்கலாம். தாகம் எடுத்தால் நீர் அருந்த வேண்டியதுதான் என்று. உண்மையில் அது சரிதான்... தண்ணீர் தான் நம் ஆரோக்கியத்திற்கான முதல் மருந்து. தினசரி தண்ணீர் குடிக்கும் நாம், முக்கியமாக இரவு தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீரை அருந்த வேண்டும். அவ்வாறு அருந்துவதால், கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் இரவு தூங்க செல்லும் சில நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிப்பது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. உடலின் ஆற்றலை அதிகரித்து, பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவியாக இருக்கிறது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம்
தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்ப்படுத்துகிறது. இதனால் பல நன்மைகளை பெற முடியும். எனவே இரவில் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது.
சிறுநீரக ஆரோக்கியம்
இரவில் தூங்க செல்லும் முன் தண்ணீர் அருந்தினால், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்க உதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை தினசரி கடைப்பிடிப்பதன் மூலம், சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.
முழங்கால் ஆரோக்கியம்
இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது, முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் வலியை குறைத்து, அவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அடிக்கடி முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இரவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது.
சரும ஆரோக்கியம்
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது, நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. இது நம் சருமத்தை தெளிவாகவும், அழகாகவும் வைத்திருக்கும். குறிப்பாக சருமப் பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த பழக்கம் மிகவும் அவசியமானது.
அதனால்தான் இரவு தூங்கச் செல்லும்முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தாகம் குறைவாக இருக்கலாம். அப்படி இருந்தாலும், சரியாக தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு அவசியமானது.